தேர்தலில் மிகப்பெரிய ஊழல்.. கிரிஷ் சோடங்கரை விசாரிக்கணும்.. காங்கிரஸ் MP ஜோதிமணி பகிரங்க குற்றச்சாட்டு..!

jothimani mp congress

தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அவ்வப்போது தனது கருத்துகளை அதிரடியாக வெளியிட்டு வருகிறார்…. திமுக கூட்டணி, தவெக கூட்டணி தொடர்பாக தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.. அந்த வகையில் சமீபத்தில் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், குதிரை பேர அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜோதிமணி கூறியிருந்தார்..


இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. வேட்பாளர்களைத் தேர்வு செய்த பிறகு அதற்குத் தகுந்தது போல தொகுதிகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன. சர்வே என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.

கட்சிக்கு நீண்டகாலம் பணியாற்றியவர்களை,வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, புதியவர்கள்,வெற்றி வாய்ப்பில்லாத பலருக்கு தொகுதிகள் கேட்டுப்பெறப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற சிலர் தேர்தல் முடிந்து சில நாட்களுக்குள் கட்சியில் இருந்து விலகுகின்றனர் அல்லது ஒதுங்கிவிட்டனர். இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்கியது யார்? எதனடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விசாரணை நடத்தாமல், தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளை மட்டும் விசாரிக்க கமிட்டி அமைப்பது தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடு மட்டுமே.

தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டது தமிழ்நாடு பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கமிட்டி. அந்தக் கமிட்டி மீதான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டுமே விசாரிக்க முடியும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொறுப்பாளர்கள் விசாரிக்க முடியாது.

காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே தன்னை சீரமைத்துக் கொள்ள விரும்பினால் தமிழ்நாடு சட்டமன்ற தேரதல் தொடர்பான விசாரணையை முறையாக நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.

பல்வேறு மாநிலத் தேர்தல்களில் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. சில நேரங்களில் இதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைகிறது. ஆனால் விசாரணை செய்வதற்குப் பதிலாக தவறு செய்தவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.

தமிழ்நாடு வேட்பாளர் தேர்வை மிக அருகில் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு வெளிப்படையாகய் தவறுகள் நடப்பது கட்சியின் எதிர்காலத்திற்கு மிகபெரிய பின்னடைவாக அமையும்.

இந்த நாட்டை பாஜக நரேந்திர மோடியிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் எவ்வித சமரசமும் இல்லாமல் போராடி வருகிறார்.

ஆனால் கட்சிக்குள் நடக்கும் இதுபோன்ற தவறுகள் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையை குலைத்து வருகிறது. நாம் ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக களத்தில் நின்று போராடி வெற்றிபெற வேண்டுமானால் கட்சிக்குள் தொண்டர்கள் மாவட்ட, வட்டார தலைவர்களின் குரலுக்கு மதிப்பு இருக்க வேண்டும். நேர்மையோடும்,வெளிப்படைத் தனமையோடும்.கட்சி செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள் செய்யப்பட வேண்டிய தேர்தல் சீர்திருத்தம் தமிழ்நாட்டில் இருந்து துவங்கட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : கடும் கோபத்தில் அமித்ஷா.. மோடி போட்ட உத்தரவு..! விஜய்யின் டெல்லி விசிட் பாதியில் முடிந்தது ஏன்..? பரபர பின்னணி..!

RUPA

Next Post

காலையில் எழுந்ததும் பிரட் சாப்பிடுறீங்களா? அப்ப கவனமாக இருங்க..! இது தெரிந்தால், அதை தொட மாட்டீங்க..!

Fri May 29 , 2026
காலை உணவு சமைக்க நேரமில்லாதபோதும், அனைவரும் பசியோடு இருக்கும்போதும், நம் நினைவுக்கு வரும் முதல் உணவு ‘பிரட்’ (Bread) தான். நாவுக்குச் சுவையூட்டும் இந்த பிரட், வயிற்றுக்குள் சென்றதும் பல நோய்களை உண்டாக்கக்கூடும் என்று உணவு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.. பிரட்-ஐ தொடர்ந்து சாப்பிட்டு வருவது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அப்படியென்றால், பிரட்-ஐ ஏன் சாப்பிடக்கூடாது? அதைச் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை இப்போது அறிந்துகொள்வோம். பிரட் சாப்பிடக்கூடாததற்கான […]
bread

You May Like