Breaking : பெரும் சோகம்..! நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்..! பிரபலங்கள் இரங்கல்..!

ajithkumar mother

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.. இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் படத்தின் அறிவிப்பு வெளியானாலே அதனை அவரின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.. திரையுலகிற்கு வருவதற்கு முன் பைக் ரேஸிங்கில் ஆர்வம் கொண்டவராக அஜித் இருந்தார்.. இதனால் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துவிட்டு பணத்திற்காக மெக்கானிக்காகவும், ஆடை விற்பனையாளராகவும் இருந்தார்..


பின்னர் 1991-ம் ஆண்டு, என் வீடு என் கணவர் படத்தின் மூலம் நடிகர் அஜித் திரையுலகில் அறிமுகமானார்.. இதை தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்..

இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி வயது மூப்பு காரணமாக காலமானார்.. அவருக்கு வயது 84. சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் அவரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.. அஜித்குமாரின் தாயாரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

அஜித்தின் தந்தை பி.எஸ். மணி என்கிற பி. சுப்பிரமணியம் கடந்த 2023-ம் ஆண்டு, தனது 85-வது வயதில் காலாமானார் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : Flash : நகைப்பிரியர்களுக்கு ஷாக்..! தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

English Summary

Actor Ajith Kumar’s mother, Mohini Mani, passed away due to old age.

RUPA

Next Post

“அந்த கத்தியை எடுடா..” அடாவடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகி.. கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்..!

Sat May 30 , 2026
Jai Krishnan, who assaulted Poclain operator Azhaguthurai, has been expelled from the TVK.
tvk member attack

You May Like