“அந்த கத்தியை எடுடா..” அடாவடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகி.. கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்..!

tvk member attack

சென்னை, தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் ஆபரேட்டரை, தவெக கொடி கட்டிய காரில் வந்த நபர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர் எங்கே என்று கேட்டு மிரட்டி உள்ளார்.. உரிமையாளரின் செல்போன் எண்ணை கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த தவெகவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்..


இதனால் தவெக கொடி கட்டிய காரில் வந்த நபர்களுக்கும், அங்கு பணியில் இருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.. இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், சம்மந்தப்பட்ட நபர்கள் குறித்து போலீசார் விராணை மேற்கொண்டு வருகின்றனர்..

இந்த நிலையில் பொக்லைன் ஆபரேட்டர் அழகுதுரையை தாக்கிய ஜெய் கிருஷ்ணன் தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.. ஜெய் கிருஷ்ணனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தவெக தலைமை உத்தரவிட்டுள்ளது.. கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யார் நடந்து கொண்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக எச்சரிக்கை விடுத்துள்ளது..

Read More : சாதி அடிப்படையில் வீடு ஒதுக்கீடு.. தவெக எம்.எல்.ஏ மீது பொதுமக்கள் பரபரப்பு புகார்.. தமிழக அரசு விளக்கம்..!

English Summary

Jai Krishnan, who assaulted Poclain operator Azhaguthurai, has been expelled from the TVK.

RUPA

Next Post

ஹோர்முஸ் மூடல்... ஆனாலும் இந்திய கப்பல்கள் பயணம்..! இந்தியாவின் ரகசிய உத்தி என்ன தெரியுமா..?

Sat May 30 , 2026
ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் கடும் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணித்து நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றன. இந்தக் கடினமான காலகட்டத்தில் மத்திய அரசு பின்பற்றி வரும், மிகுந்த உத்திசார்ந்த மற்றும் ரகசியமான ஒருங்கிணைப்பு அணுகுமுறை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் போர்க்களத்தில் நுழைந்ததைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்திப் பாதை […]
strait of hormuz 1 1 1

You May Like