புதிய இயக்கத்தை தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.. சமூக வலைதளங்களில் நேரலையில் பேசிய அவர் “ தமிழ்நாட்டில் அடுத்த நடைபெற உள்ள பொது தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்.. டிசம்பர் 4-ம் தேதியே பாஜகவில் இருந்து விலகுவதை தெரிவித்து விட்டேன்.. தமிழ்நாட்டின் அடையாளத்தோடு பாஜக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.. 18 மாதங்களாக எனது கருத்து வேறுபாடுகளை பாஜக தலைவர்களிடம் கூறினேன்.
எனவே அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்.. நமது இயக்கத்திற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டும்.. புதிய தொண்டர்களை தயார்படுத்த கொஞ்சம் காலம் ஆகும்.. தமிழகத்தில் இன்றும் புதிய அரசியல் கட்சிக்கான தேவை உள்ளது.. அரசியல் இயக்கமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்த போது முதலில் நல்லக்கண்ணு ஐயாவை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.. எல்லா நிறுவன மேலிடத்திலும் தமிழன் இருக்கின்றன.. அவர்கள் எல்லோரும் நமது இயக்கத்தில் பங்களிக்க வேண்டும் என்பதே என் ஆசை.. வளர்ந்த பாரதம் இருக்கும் போது முதன்மை மாநிலமாக தமிழகத்தை முன்னிறுத்த வேண்டும்..” என்று கூறினார்..



