தமிழகத்தில் காலியாகும் ஒரு ராஜ்யசபா இடத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த ராஜ்யசபா இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கியது தவெக.. இந்த ராஜ்யசபா இடத்திற்கு காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.. இதை தொடர்ந்து பிரவீன் சக்ரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. அதில் “ தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்
என் மீது நம்பிக்கை வைத்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்..” என்று பதிவிட்டிருந்தார்..
இந்த நிலையில் பிரவீன் சக்ரவர்த்தியின் பதிவுக்கு சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.. புதிய கூட்டணியின் சார்பில் சிபிஎம் பெயரை குறிப்பிட்டிருப்பது தவறானது என்று கூட்டணி அமைப்பது குறித்தோ, வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.. பிரவீன் சக்ரவர்த்தியின் செயல் அதிக பிரசங்கித்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.. என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட பிரவீன் சக்ரவர்த்திக்காக ராஜ்யசபா எம்.பி. சீட்டை தவெக விட்டுக்கொடுத்துள்ளது.. இந்த சூழலில் தான் இந்த கூட்டணிக்கு புதிய சூட்டியதுடன் அதில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக பதிவிட்டுள்ளார்.. அவரது இந்த பதிவு கூட்டணி கட்சிக்குள்ளேயே புகைச்சலை கிளப்பி உள்ளது..
Read More : “கவர்ச்சி இல்லாம வேற எதை வச்சு ஜெயிச்சீங்க..? இதுல கோவம் வேற வருது CM சாருக்கு..” விஜய்யை விளாசிய உதயநிதி..!



