ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை..! இபிஎஸ் குறித்த பேச்சுக்கு கே.பி. முனுசாமி எச்சரிக்கை..!

kp munusamy

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணையும் நிகழ்ச்சி இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலுகத்தில் நடைபெற்றது.. அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா “ அதிமுக நிர்வாகிகள் 90% பேர் தவெகவுக்கு வருவார்கள்.. கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சமமான பணி வழங்கப்படும்.. எம்.ஜி.ஆருடன் பணியாற்றியவர்கள் தவெகவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.. ஜெயலலிதாவை தவிர வேறு யாரையும் அதிமுக பொதுச்செயலாளராக அக்கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை..” என்று தெரிவித்தார்..


இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு அதிமுக மூத்த தலைவர் கே.பி. முனுசாமி பதிலடி கொடுத்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ இன்று அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தாந்தோன்றித்தனமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.. அவர் பல்வேறு தவறான கருத்துகளை தெரிவித்துள்ளார்.. அவருக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.. ஆதவ் அர்ஜுனா முதலில் திமுகவுக்கு ஓடினார்.. அங்கு வாய்ப்பில்லை..

பின்னர் விசிகவுக்கு போனார் அங்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.. அதிமுகவுக்கும் வர முயன்றார்.. அவரை இபிஎஸ் ஏற்கவில்லை.. தவெகவுக்கு போனார் தேர்தல் வந்தது, அவருக்கு வாய்ப்பு கிடைத்தது அவர் அமைச்சரானார்.

தலைவருக்காக உழைக்காத ஆதவ் அர்ஜுனா, எங்கெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அங்கெல்லாம் ஓடியவர்.. அதிமுகவுக்காக உழைத்த தொண்டர்களின் உணர்வை மதிக்காமல் அவர் தாந்தோன்றித்தனமாக பேசி வருகிறார்.. அதிமுக தொண்டன் வாக்களித்து தான் தவெக வெற்றி என கூச்சம் இல்லாமல் வெட்கப்படாமல் ஆதவ் கூறுகிறார்.. கொச்சைப்படுத்தி பேசுவதை ஆதவ் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்..

பேப்பரில் மட்டும் தான் பொதுச்செயலாளர் இபிஎஸ் என கூறிய ஆதவ் அர்ஜூனாவுக்கு நாவடக்கம் தேவை.. ஜெயலலிதா இருந்த போது நம்பிக்கைக்குரிய தொண்டனாக இருந்தவர் இபிஎஸ்.” என்று தெரிவித்தார்..

Read More : ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை..! இபிஎஸ் குறித்த பேச்சுக்கு கே.பி. முனுசாமி எச்சரிக்கை..!

RUPA

Next Post

தினமும் வெறும் ரூ. 33 சேமித்தால், உங்கள் கையில் ரூ. 19 லட்சம் சேரும்..! ஒரு அற்புதமான முதலீட்டு திட்டம்..!

Sat Jun 6 , 2026
பெரிய நிதியை உருவாக்க அதிகத் தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், சிறிய முதலீடுகள் மூலமாகவும் நீங்கள் ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும். உங்கள் சிறிய முதலீடுகளைப் பெரிய நிதியாக மாற்றுவதில் ‘கூட்டு வட்டி’ (compound interest) முக்கியப் பங்கு வகிக்கிறது. முதலீட்டைத் தொடங்குவது எப்படி? முதலாவதாக, தினமும் வெறும் ரூ. 33-ஐச் சேமிப்பதன் மூலம் ரூ. 19 லட்சம் வரையிலான […]
is cash still king in upi dominated digital india v0 JY aIVehj5q7MImK6z91HCizUCQ7Hhp LFuZpWlHwgo 1

You May Like