Flash : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை.. வீரபாண்டியன் அறிவிப்பு..!

stalin cipi veera pandiyan

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல் ஆளாக காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.. மேலும் அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்தது..


இதையடுத்து விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு தந்தன.. பின்னர் தவெக அழைப்பு விடுத்ததன் பேரில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீட் ஆகிய கட்சிகள் தவெக அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன..

இதனிடையே சமீபத்தில் நடந்த திமுக நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தவெக ஆட்சி 3 மாதங்கள் கூட தாங்குமா என்ற நிலையில் உள்ளதாக பேசியிருந்தார்..

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பெ. சண்முகம் திமுக கூட்டணி என்ற ஒன்றே இப்போது இல்லை என்றும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் இப்போது இல்லை எனவும் தெரிவித்தார்..

இந்த சூழலில் திமுக கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்றும் இன்றும் ஆலோசனை நடத்தியது.. அதன்பின்னர் கூட்டணி முடிவை அறிவிப்போம் என்று அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வீரபாண்டியன் கூறியிருந்தார்..

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர முடியாத நிலை உள்ளதாக சிபிஐ மாநில செயலாளர் வீர பாண்டியன் தெரிவித்துள்ளார்.. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் தொடர முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.. 2 நாட்களாக ஆலோசனை நடத்திய நிலையில் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.. கூட்டணியில் இல்லை என்பதை இதைவிட அழுத்தமாக சொல்ல முடியாது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்..

தொடர்ந்து பேசிய அவர் “ இன்று நிலவும் இந்த சூழல் கூட்டணியில் தொடர இடம் தரவில்லை.. அதிமுக, திமுக என்ற திராவிட கட்சிகளை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.. திமுக, அதிமுக இரண்டும் ஜனநாயக சக்திகள் தான்.. அதே போல் தவெகவும் புதிய ஜனநாயக சக்தியாக உருவெடுத்துள்ளது.. எனவே வர்க்க நலன் சார்ந்து தான் போட்டியிட முடியும்.. தொடர்ந்து ஜனநாயக சக்திகளோ பயணிப்போம்.. எந்த ஜனநாயக சக்தி உடன் சேர வேண்டும் என்பதை அப்போதைய சூழலை பொறுத்து முடிவெடுப்போம்.. ” என்று தெரிவித்தார்..

Read More : Flash : பரபரப்பு.. டெல்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இல்லத்தில் தீ விபத்து.. பெரும் சேதம் தவிர்ப்பு..!

RUPA

Next Post

ஜப்பானை தொடர்ந்து நேபாளமும் இந்திய மாம்பழங்கள் இறக்குமதிக்கு தடை விதித்தது.. என்ன காரணம்..?

Thu Jun 11 , 2026
இந்திய மாம்பழ விவசாயிகளுக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜப்பானை தொடர்ந்து இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு நேபாளம் தடை விதித்துள்ளது. இந்த மாம்பழங்களில் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் இருப்பதாகக் கூறப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன், எல்லைப் பகுதிகளில் தனிமைப்படுத்தல் (quarantine) வசதிகள் இல்லாததும் இதற்கொரு காரணமாகும். இந்தத் தடையின் காரணமாக, உள்நாட்டுச் சந்தைகளில் தற்போது உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. கோடைக்காலத்தில் மாம்பழங்களுக்கு அதிக தேவை உள்ளது. […]
indian mangoes 1

You May Like