Flash : ஒரே நாளில் ரூ.5,000 உயர்வு..! மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி விலை..!

Gold Jewellery

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880க்கு விற்பனை செய்யப்படுகிறது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.13,860-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,10,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.. 2-வது நாளாக இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து, ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 அதிகரித்து ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : EMI செலுத்தத் தவறினால், வங்கி எப்போது உங்கள் வீட்டை ஏலம் விடும்..? கடன் வாங்கியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..!

English Summary

In Chennai today, the price of ornamental gold has risen by Rs. 480 per sovereign, and it is being sold at Rs. 1,10,880.

RUPA

Next Post

இதை காரணம் காட்டி ஆவின் பச்சைப் பால் விற்பனையை நிறுத்துவீங்களா..? பொங்கிய அன்புமணி..!

Sat Jun 13 , 2026
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் தனது கிரீன் மேஜிக் அதாவது பச்சை நிற பாக்கெட் பால் விநியோகத்தை திடீரென 60 முதல் 70 சதவீதம் வரை திடீரென குறைந்துள்ளது.. 2023-ல் இருந்து படிப்படியாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் நாட்களில் முழுமையாக நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. இந்த நிலையில் ஆவின் பச்சைப் […]
aavin anbumani

You May Like