ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதை போல தான் தவெக ஆட்சியிலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.. தவெக ஆட்சி அமைந்தது முதலே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தினமும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.. ஸ்ரீவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகள் சிலர் தங்கள் கட்சி பெண்ணையே வேலை வாங்கி தருவதாக கூறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியது..
அதே போல் சேலத்தில் பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டியதாக தவெக பிரமுகர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.. 50-க்கும் மேற்பட்ட பென்களின் வீடியோக்களை எடுத்து மிரட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது..
பெண்களை மிரட்டி வீடியோ எடுத்த தவெக பிரமுகர் மணிகண்டன் மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார். மேலும் விசாரணை கூட மேற்கொள்ளாமல் காவல்துறை ஆதாரங்களை அழித்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டி உள்ளார்.. சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவமா என்று அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் பாஜக மகளிரணியின் தேசிய தலைவரான வானதி சீனிவாசன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ ஆச்சரியக்குறிகளா இல்லை ஆபாசப் பொறுக்கிகளா முதல்வர் திரு.விஜய் அவர்களே? சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ஆபாசமாக வீடியோ எடுத்து, தங்களது கட்சிப் பிரமுகர் ஒருவர் மிரட்டியதாக வெளிவந்துள்ள செய்தியை அறிவீர்களா?
ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் பல்லி, கழனிப் பானையில் விழுந்தததாம் துள்ளி என்னும் கதையாக, “தூய சக்தி, மாற்று சக்தி” என்று முழங்கிவிட்டு, பெண்கள் விரோத திமுகவின் புது வெர்ஷனாகவே தங்களது தவெக முளைத்துள்ளதே, இதற்கு என்ன பதில்? கடந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே ஆலந்தூர் வேம்புலி, சேலம் மணிகண்டன் எனத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை களவாடும் நபர்கள் அனைவரும் தவெகவைச் சார்ந்தவராக இருக்கும் நிலையில், இன்னும் எத்தனை எத்தனை கொடூரர்களை தவெக வளர்த்து வருகிறது?
தவெகவில் பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளுக்கு ஆதரவளிக்கும் அந்த “மேலிடம்” யார்? மொத்தத்தில், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் அதிரடிப் படையைவிட, தங்கள் கட்சியின் ஆபாசப் பொறுக்கிப் படையை அழித்தொழிப்பதே முக்கிய தேவை! அதனை முதலில் நிறைவேற்றுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : மக்களுக்கே இது தெரியும்.. யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கம்..? விஜய் அரசை சாடிய அண்ணாமலை..!



