Breaking : வாரத்தின் முதல் நாளே ஷாக்..! தங்கம் விலை ரூ.1,680 உயர்வு.. வெள்ளி விலை ரூ.10,000 அதிகரிப்பு..!

gold rate

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,680 ரூ.1,12,560க்கு விற்பனை செய்யப்படுகிறது..

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.210 உயர்ந்து ரூ.14,070-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்து ரூ.1,12,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து, ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 அதிகரித்து ரூ.2.80 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஈரான் – அமெரிக்கா..! ஆனா ஒரு கண்டிஷன்..! டிரம்ப் முதலில் இதை செய்யணும்..!

English Summary

In Chennai today, the price of ornamental gold has risen by ₹1,680 per sovereign, and it is being sold at ₹1,12,560.

RUPA

Next Post

Flash : தமிழகத்தில் காலையிலேயே பயங்கர விபத்து.. பறிபோன 3 உயிர்கள்..!

Mon Jun 15 , 2026
பெரம்பலூர் அடுத்த துறையூர் சாலையில் கார், லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.. இன்று காலை 6 மணியளவில் பெரம்பலூரில் இருந்து அரியலூரை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.. அப்போது டி.களத்தூர் பிரிவு பாதை அருகே, எதிரே வந்த லாரி காரின் மீது பயங்கரமாக மோதியது.. இந்த விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது.. இந்த விபத்தில் சிக்கி காரில் சென்ற சங்கர், […]
accident

You May Like