Flash : தமிழகத்தில் காலையிலேயே பயங்கர விபத்து.. பறிபோன 3 உயிர்கள்..!

accident

பெரம்பலூர் அடுத்த துறையூர் சாலையில் கார், லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.. இன்று காலை 6 மணியளவில் பெரம்பலூரில் இருந்து அரியலூரை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.. அப்போது டி.களத்தூர் பிரிவு பாதை அருகே, எதிரே வந்த லாரி காரின் மீது பயங்கரமாக மோதியது.. இந்த விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது..


இந்த விபத்தில் சிக்கி காரில் சென்ற சங்கர், சக்தி, விஜய் ஆகிய 3 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.. இந்த விபத்து காரணமாக பெரம்பலூர் – துறையூர் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.. காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்த நிலைமை பின்னர் சீரானது.. விபத்தை தொடர்ந்து லாரி ஓட்டுநரை அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RUPA

Next Post

வங்கி லாக்கர்களில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம்..? வங்கி விதிகள் இதோ..!

Mon Jun 15 , 2026
வீட்டில் வைத்தால் திருட்டு பயம் இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வங்கிக் லாக்கர்களில் (bank lockers) வைக்கிறார்கள். ஆனால், வங்கிக் லாக்கர்களில் எவ்வளவு தங்கத்தை வைக்கலாம்? ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா? இது குறித்து பலருக்கும் சந்தேகங்கள் உள்ளன. இது குறித்து ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம். இந்திய மக்களுக்குத் தங்கத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு என்பது சொல்லாமலே தெரியும். திருமணம் மற்றும் விசேஷங்களின்போது […]
bank locker 1

You May Like