அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய முகங்களில் ஒருவருமாக இருப்பவர் சி.விஜயபாஸ்கர்.. அதிமுகவினர் பலரும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வரும் நிலையில் சமீபத்தில் விஜயபாஸ்கரும் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை எழுந்தது.. அதிமுகவிலேயே தொடர்வதா அல்லது தவெகவில் இணைவதா என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்..
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தவெகவில் இணையப் போவதாக கூறுவது வெறும் யூகம் தான் என்றும் அவர் தெரிவித்தார்.. மக்கள் சொன்ன கருத்துகளை உள்வாங்கி இருக்கிறேன்.. தொகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்.. எனக்காக கட்சியில் உழைத்தவர்கள் என்ன நினைக்கிறார்களோ அது தான் என் முடிவாக இருக்கும்.. இந்த மாதிரியான நேரத்தில் மக்களின், நிர்வாகிகளின் கருத்துகளை கேட்காமல் முடிவெடுக்க முடியாது..” என்று தெரிவித்தார்..
எனினும் விஜயபாஸ்கர் திமுகவில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.. ஆனால் அவர் எப்போது திமுகவில் இணைவார் என்பது தெரியவில்லை.. தனது அரசியல் நிலைப்பாட்டை விஜய பாஸ்கர் இன்னும் அறிவிக்கவில்லை..
இந்த நிலையில் விஜயபாஸ்கர் இபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் அவரை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் “ உழைக்கும் உண்மைத் தொண்டர்களை
எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும்.. ‘வெற்றிக்கான பாதை அல்ல.’
வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல… எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான்.” என்று குறிப்பிட்டுள்ளார்..



