700 KM.. மின்னல் வேகத்தில் பாய்ந்த ஏவுகணை..! டிரம்பை நடுங்கவிட்ட முக்கிய நாடு..! அடுத்த போர் ஆரம்பமா..?

North Korea 2026

தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வடகொரியா குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாகப் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தி பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.


தென்கொரியக் கூட்டுப் படைத் தலைமைத் தளபதி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வடகொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான வோன்சான் நகரிலிருந்து காலை 6 மணியளவில் இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. சுமார் 700 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பறந்து சென்று இலக்கைத் தாக்கிய இந்த ஏவுகணையை ஜப்பானிய பாதுகாப்புப் படைகளும் கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்த ஏவுகணை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் விழவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் எந்தவொரு ராணுவ அச்சுறுத்தலையும் முறியடிக்க அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா தயார் நிலையில் இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி வடகொரியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை கடுமையான ஆத்திரமூட்டல் எனச் சாடியுள்ள தென்கொரிய அதிபரின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், இதுபோன்ற ஏவுகணைச் சோதனைகளை வடகொரியா உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஐ.நா-வின் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், கடந்த 2019-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான பேச்சுவார்த்தை முறிந்ததற்கு பிறகு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டின் அணு மற்றும் ஏவுகணை திறனை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறார்.

இதனிடையே, தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் ‘உல்சி ஃப்ரீடம் ஷீல்டு’ என்ற பெயரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பிரம்மாண்ட கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்கவுள்ளன. இந்த பயிற்சியை தங்களுக்கு எதிரான போருக்கான ஒத்திகையாகவே வடகொரியா கருதுகிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்த வடகொரியா, தற்போது ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான தனது ராணுவ மற்றும் வர்த்தக உறவுகளையும் பலப்படுத்தி வருவது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Read More : தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாட வேண்டும்..!! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

Next Post

தினமும் குக்கரை இப்படி யூஸ் பண்றீங்களா..? ரப்பர் வளையத்தில் இருக்கும் பேராபத்து..!! வல்லுநர்கள் வார்னிங்..!!

Thu Aug 13 , 2026
வீட்டில் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் பிரஷர் குக்கரை சுத்தமாக கழுவினாலும், அதன் மூடியில் இருக்கும் ரப்பர் கேஸ்கட்டை (Gasket) பலர் கவனிக்காமல் விட்டுவிடுவதாக ஆரோக்கிய வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த சிறிய ரப்பர் வளையத்தை சரியாக பராமரிக்கத் தவறினால், அதுவே பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர். பொதுவாக குக்கரை பயன்படுத்திய பிறகு, இந்த ரப்பர் வளையத்தின் அடியில் எண்ணெய் பிசுக்கு, சிறிய அளவிலான உணவுத் துகள்கள் மற்றும் ஈரப்பதம் […]
231124085914maxresdefault 1

You May Like