நீங்கள் என்னதான் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் வந்த பணம் வந்த படியே செலவாகிவிடுகிறது.இதற்கு காரணம் வீட்டில் நேர்மறை எண்ணங்களும், கடவுள் அனுக்கிரகம் இல்லாதது தான். வீட்டில் கடவுள் அனுக்கிரகமும் ,நேர்மறை எண்ணங்கள் வளர்ந்து மகாலக்ஷ்மி வீட்டில் குடியேர இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்: பச்சை கற்பூரம் .விரலி மஞ்சள் ,சந்தனம், இலவங்கம்,பன்னீர் மற்றும் ஏலக்காய்.
வீட்டு பூஜை அறை, துளசி மாடம், வீட்டு நிலவாசல், பணம் வைத்துள்ள இடங்களில் ஒரு வெள்ளை துணியில் இந்த பொருட்கள் அனைத்தையும் சம அளவு போட்டு அதில் சிறிது பன்னீர் தெளித்து மூட்டையாக கட்டி இந்த இடங்களிலெல்லாம் வைக்க வேண்டும். மாதத்திற்கு ஒருமுறை இந்த மூட்டையில் உள்ள பொருட்களை யார் காலும் படாத இடத்தில் கட்டி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பண வரவு அதிகரித்து செல்வம் செழிக்கும்.