மக்கள் மனங்களில் இருக்கும் நன்றி உணர்வை Delete செய்யவே முடியாது.. நான் முதல்வன் திட்டம் முடக்கம்.. ஸ்டாலின் கருத்து..!

mk stalin 2

கும்பகோணம் பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்த பயங்கர தீவிபத்தில் இருந்து, தப்பிய ஜெனிபர் என்ற சிறுமி தற்போது துணை ஆட்சியராகி உள்ளார்.. ஜெனிபரின் து வெற்றிப் பயணம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ள ஜெனிபர், “ஆரம்பக் காலத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழல் இருந்தது.

அப்போது, தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் எனக்குக் கல்வி உதவித்தொகை கிடைத்தது. அதன் மூலம் அடையாறில் 8 மாதங்கள் தங்கிப் பயிற்சி பெற்றேன். அதன் பின்னரே என்னால் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, இன்று இந்த இடத்துக்கு வர முடிந்தது,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் முதல்வர் ஸ்டாலின் நான் முதல்வன் பெயர் மாற்றம் குறித்து விமர்சித்துள்ளார்.. தனது பதிவில் “ நீங்கள் நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.

ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.

கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!” என்று தெரிவித்துள்ளார்..

Read More :

RUPA

Next Post

வங்கதேசத்தில் ராமர் படம் அவமதிப்பு..! ஆயிரக்கணக்கான இந்துக்கள் மாபெரும் போராட்டம்.. பரபரப்பு..!

Sat Jun 20 , 2026
வங்காளதேசத்தில் ராமர் சிலை அமைப்பது தொடர்பான சர்ச்சை மேலும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ரங்பூர் பிரிவின் கைபந்தா மாவட்டத்தில் உள்ள பலாஷ்பாரியில் 81 அடி உயர ராமர் சிலையை அமைப்பதை எதிர்க்குமாறு இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில், ராமர் படம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, டாக்காவில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். வெள்ளிக்கிழமை (ஜூன் 19), ‘இந்து மகாஜோத்’ அமைப்பின் அழைப்பின் பேரில் இந்து அமைப்புகளும் மாணவர்களும் […]
hindu massive protest in dhaka 1

You May Like