குழந்தைகள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் இருக்க இது தான் காரணமா? நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!

kids using phone

குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை நீண்ட நேரம் சமூக வலைதளங்களில் இருக்க வைக்கும் வகையில் தங்களது தளங்கள் வடிவமைக்கப்பட்டதாக மெட்டா நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் குறித்து பல முக்கியமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொழில்நுட்ப உலகில் கவனம் பெற்றுள்ளது.


அமெரிக்காவின் 29 மாகாணங்கள் இணைந்து மெட்டாவுக்கு எதிராக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. குழந்தைகளின் மனநலனை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களின் சில அம்சங்கள் உருவாக்கப்பட்டதாகவும், சிறார்களின் தனிப்பட்ட தகவல்கள் முறையாக கையாளப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கின் விசாரணையில், பயனர்களை அதிக நேரம் தளங்களில் வைத்திருப்பது மெட்டாவின் வர்த்தக அணுகுமுறையின் ஒரு பகுதியாக இருப்பதாக மாகாணங்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை ஈர்க்கும் வகையில் தளங்களின் வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், சமூக வலைதள பயன்பாட்டுக்கும் இளைஞர்களிடையே பதற்றம், மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரிப்பதற்கும் தொடர்பு இருப்பதாக மாகாணங்கள் தரப்பு வாதிட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மெட்டா நிறுவனம் மறுத்துள்ளது. சமூக வலைதளங்களை பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நிரூபிக்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மெட்டாவின் முன்னாள் பாதுகாப்பு பொறியாளர் ஆர்டுரோ பெஜார் முக்கிய சாட்சியாக ஆஜராகியுள்ளார். குழந்தைகளை பாதுகாக்கும் அம்சங்கள் தொடர்பாக நிறுவனத்துக்குள் முன்பே கவலைகள் தெரிவிக்கப்பட்டதாகவும், 13 வயதுக்கு குறைவானவர்கள் தளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வழக்கில் மெட்டாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், சமூக வலைதளங்களின் தற்போதைய செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பதிவுகளின் லைக்குகளை மறைப்பது, தொடர்ந்து பதிவுகளை காட்டும் Infinite Scroll வசதியில் மாற்றம் செய்வது, இளம் பயனர்களுக்கு பயன்பாட்டு நேரத்தை கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படலாம்.

மேலும், 13 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கான கணக்கு மற்றும் பயன்பாட்டு விதிமுறைகளிலும் கடுமையான மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது. இந்த வழக்கு சுமார் ஆறு வாரங்கள் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சாட்சியம் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களின் பயன்பாடு மற்றும் சிறார்களின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மெட்டாவுக்கு எதிரான இந்த வழக்கு அடுத்தகட்டத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்னாப்சாட், டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட பிற சமூக தளங்களும் இதுபோன்ற சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: முதல் இரவில் மனைவி சொன்ன வார்த்தை.. 2 ஆண்டுகள் நீண்ட விவாகரத்து வழக்கு; ரூ.10 லட்சம் இழந்த கணவர்!

Saranya

Next Post

ஆண்கள் அலட்சியப்படுத்தக் கூடாத அறிகுறிகள்.. சிறுநீர் கழிப்பதில் இந்த மாற்றங்கள் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்!

Wed Aug 19 , 2026
ஆண்கள் வயதாகும்போது சிறுநீர் கழிப்பதில் சில மாற்றங்கள் ஏற்படுவது பொதுவானது. இதனால், தொடர்ந்து ஏற்படும் சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளையும் வயதாவதன் இயல்பான அறிகுறிகள் என பலரும் அலட்சியப்படுத்துகின்றனர். அதேநேரத்தில், ஒவ்வொரு சிறுநீர் பிரச்சினையும் புரோஸ்டேட் புற்றுநோயைக் குறிக்காது என்பதும் முக்கியம். ஆனால், புதிதாகத் தோன்றும் அல்லது தொடர்ந்து மோசமடையும் அறிகுறிகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். சிறுநீர் பிரச்சினை என்றாலே புற்றுநோயா? வயதான ஆண்களிடம் காணப்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று […]
Men 2025

You May Like