ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.. அப்போது மின்வெட்டு பிரச்சனை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து பேசினார்.. மேலும் சிங்கப்பெண் அதிரடி படை பெண்கள்
இந்த நிலையில் உதயநிதியின் இந்த கருத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்தார்.. அப்போது பேசிய அவர் “ 40 நாட்கள் ஆட்சியை இந்த அரசு நிறைவு செய்துள்ளது.. இதை பார்த்து ஏமாற்றமே மட்டுமே மிஞ்சுகிறது என உதயநிதி பேசி உள்ளார்.. திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் மட்டுமே சந்தித்ததால் தான் எங்களை தேர்வு செய்துள்ளார்..
ஆளுநர் மகிழ்ச்சியாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் கூறுகிறார்., எங்கள் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.. ஒரு குடும்பத்தில் இருந்து மட்டுமே முதல்வர் வரும் சூழலை மக்கள் மாற்ற முடிவெடுத்துள்ளனர்..
தமிழ்நாட்டில் மின்வெட்டை அறிமுகம் செய்ததே திமுக தான்.. சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் பிரச்சனை என அனைத்திற்கும் திமுக தான் காரணம்.. சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் பிரச்சனை என அனைத்திற்கும் திமுக தான் காரணம். திமுகவை போல் கூட்டணி கட்சி தலைவர்களை பிளாஸ்டிக் சேரில் அமர வைக்கவில்லை.. விவசாயிகள் சங்க தலைவர் மீது குண்டாஸ் போட்ட அரசு திமுக அரசு தான்.
சிங்கப்பெண் அதிரடி படை என்பது தமிழ்நாட்டின் பொக்கிஷம்.. சிங்கப்பெண் அதிரடி படை குறித்து இனி யாரும் தவறாக பேசக் கூடாது.. அப்படி பேசினால் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.. நான் முதல்வன் திட்டத்தை முடக்கவோ, மாற்றவோ நாங்கள் முயற்சிக்கவில்லை.. ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.. எங்கள் கட்சியின் ஒன்றிய செயலாளர், அரசுப் பள்ளியில் ரீல்ஸ் எடுத்ததற்காக அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளோம்..” என்று தெரிவித்தார்..
Read More : மின்வெட்டு பிரச்ச்சனையில் பெரம்பூர் தான் முதலிடம்.. உதயநிதி காட்டம்.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்..!



