தவெக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கு மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது.. ஊழல் செய்ய தெரியாது.. முதல்வர் விஜய் பேச்சு..!

vijay assembly n

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜோசப் விஜய் உரை பதிலுரை ஆற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத, பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை கொடுப்போம்.. கடந்த ஆட்சியில் நடந்த நிதி மேலாண்மை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டோம்.. அவர்கள் ஆட்சியால் தமிழக மக்களுக்கு தொல்லையோ தொல்லை தான்.. இப்படி ஆட்சி நடத்தி விட்டு தவெக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆட்சி நிர்வாகம் தெரியாது என்று சொல்கின்றனர்.


ஆம். எங்கள் எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் பணி செய்யும் தெரிந்த அளவுக்கு மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது.. டெண்டர்களை முறைப்படுத்த தெரிந்த அளவுக்கு, அதன் விலையை உயர்த்தி ஊழல் செய்ய தெரியாது தான்.. பதவி உயர்வு வழங்கவும், பணியிட மாற்றத்திற்கு கலந்தாய்வு நடத்த தெரியுமே தவிர, பதவி உயர்வுக்கும் பணியிட மாற்றத்திற்கும் பணம் வாங்க தெரியாது..

புதிய பணியிடங்களை உருவாக்க தெரியுமே தவிர, அந்த பணியிடங்களை பணத்திற்கு விற்க தெரியாது தான். கோயில்களில் நடக்கும் நிர்வாக சீர்கேட்டை தடுக்க தெரியுமே, கோவில் பணத்தை கொள்ளையடிக்க தெரியாது தான், தங்கத்தை உருக்கி தாரை வார்க்க தெரியாது தான்.. கனிம வளத்தை பாதுகாக்க தெரிந்த அளவுக்கு கனிமத்தை விற்று கொள்ளையடிக்க தெரியாது தான்.. அரசு வருமானத்தை அரசு கஜானாவில் மாற்ற தெரிந்த அளவுக்கு, அந்த பணத்தை தனிப்பட்ட கஜானாவுக்கு மடைமாற்ற தெரியாது தான்..

போதை கலாச்சாரத்தை தெரிந்த அளவுக்கு, போதை கலாச்சாரத்தை வளர்க்க தெரியாது தான்.. பெண்களை மதிக்கும் அளவுக்கு ஓசி பஸ், 1000 கேஸ் என்று பேச தெரியாது தான்.. எங்களுக்கு மக்கள் சேவை தெரிந்த அளவுக்கு சுயநல தேவையை செய்து கொள்ள தெரியாது தான்.. எங்களுக்கு இதெல்லாம் தெரியாது தான்.. இதை எல்லாம் நாங்கள் தெரிந்து கொள்ளவும் போவதில்லை.. அது கடைசிவரை தெரியாமலே இருந்து  கொள்ளட்டும்..

Read More : “ ஷூட்டிங்கில் இருந்து நேரா இங்க வரல.. நடிகன் கட்சி என்று நக்கல் செய்கின்றனர்.. மனதை விட்டு நீங்காத வலிகள் உள்ளன..” சட்டப்பேரவையில் விஜய் உருக்கம்..!

RUPA

Next Post

Flash : முதல்வர் விஜய் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு.. சட்டப்பேரவையில் கடும் அமளி..! உதயநிதியின் மைக் ஆஃப்..!

Tue Jun 23 , 2026
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரையாற்றினார்.. அப்போது முதல்வர் விஜய் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. டாஸ்மாக்கில் கட்சி நிதி என முதல்வர் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.. ஆதாரம் இல்லாமல், பேரவையில் அவதூறாக பேசியதாக திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.. சட்டப்பேரவையில் ஒரே நேரத்தில் எதிர்க்கட்சியினர் ஆளுக்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.. அப்போது […]
dmk assembly

You May Like