Flash : முதல்வர் விஜய் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு.. சட்டப்பேரவையில் கடும் அமளி..! உதயநிதியின் மைக் ஆஃப்..!

dmk assembly

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரையாற்றினார்.. அப்போது முதல்வர் விஜய் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. டாஸ்மாக்கில் கட்சி நிதி என முதல்வர் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.. ஆதாரம் இல்லாமல், பேரவையில் அவதூறாக பேசியதாக திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்..


சட்டப்பேரவையில் ஒரே நேரத்தில் எதிர்க்கட்சியினர் ஆளுக்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.. அப்போது சபாநாயகர்’ முதல்வர் விஜய் பேசி முடித்த பின்னர் எதிர்க்கட்சியினர் பேச அனுமதி தருகிறேன்.. எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு தருகிறேன்..” என்று தெரிவித்தார்..

ஆளுங்கட்சியாக இருந்த போது, நாங்கள் பேசி முடித்த பின்பு எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று நீங்கள் சொன்னீர்கள், அதையே பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்..

திமுக உறுப்பினர்கள் சபையின் மாண்பை காக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்தார்.. தவெகவினரை ஒருமையில் அழைப்பதாகவும் அவர் தெரிவித்தார்..

முதல்வர் விஜய் பேசி முடித்த பின்னர் அனுமதி தருவதாக சபாநாயகர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.. எதிர்க்கட்சி தலைவர் தனது கட்சி உறுப்பினர்களை அமைதிப்படுத்த வேண்டும் என்றும் சாபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்..

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், முதல்வர் விஜய் பேசிய உடன் எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் பேசினால் நன்றாக இருக்கும்..” என்று கூறினார்..

அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா “ திமுக முதல்நாளில் சபையின் மரபையும் பாரம்பரியத்தையும் பற்றி வகுப்பு எடுத்தார்கள்.. அந்த மரபின் படி நாங்கள் நடந்து வருகிறோம்.. நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் சட்டத்திற்கு எதிராக பேசும் போது நாங்கள் அமைதியாக இருந்தோம்.. இன்று முதல்வரின் முதல் உரை.. முதல்வர் ஏன் பேசவில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.. இன்று பேச ஆரம்பித்த உடன், எதற்காக முதல்வர் பேசும் போது குறுக்கிடுகிறார்கள் என்று தெரியவில்லை.. முதல்வர் பேச அனுமதிக்க வேண்டும்.. அவர்கள் பேசி முடித்த உடன் அவர்கள் கேள்வி கேட்கட்டும், நாங்கள் பதிலளிக்கிறோம்..” என்று தெரிவித்தார்..

எனினும் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் மைக் அணைக்கப்பட்டது.. பின்னர்

RUPA

Next Post

கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தந்தால் ஏன் கதறுகிறீர்கள்..? சோஃபா மாடல் ஆட்சியா..? முதல்வர் விஜய் பதிலடி..!

Tue Jun 23 , 2026
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரையாற்றினார்.. அப்போது முதல்வர் விஜய் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. டாஸ்மாக்கில் கட்சி நிதி என முதல்வர் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.. ஆதாரம் இல்லாமல், பேரவையில் அவதூறாக பேசியதாக திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.. கடும் எதிர்ப்புக்கு பின்னர் முதல்வர் விஜய் மீண்டும் பேசத் தொடங்கினார்.. அப்போது “ […]
cm vijay assembly 1

You May Like