“CM நிகழ்ச்சியில் தயவு செஞ்சு கரண்ட்டை மட்டும் கட் பண்ணிடாதீங்க சார்.. அசிங்கமா போய்டும்..!” விஜய் அரசை பங்கம் செய்த அதிமுக ஐடி விங்..!

eb issueadmk it wing

சென்னை கலைவாணர் அரங்கில் 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் இன்று வழங்கினார்.. எரிசக்தி துறையில் 383 உதவி பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.. டிஎன்பிஎஸ்சி ட்மூலம் தேர்வான 401 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்..


இதனிடையே இந்த நிகழ்ச்சி தொடர்பாக, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி செயற் பொறியாளருக்கு நேற்று முன் தினம் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.. அதில் “ சென்னை கலைவாணர் அரங்கத்தில் 24.06.2026 காலை 10:00 மணியளவில் “தமிழ்நாடு மின்சார வாரியம்” சார்பாக “379 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் மின் தடை ஏதும் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்..

இந்த நிலையில் இந்த கடிதத்தை பதிவிட்டு, அதிமுக ஐடி விங், தவெக அரசையும், முதல்வர் விஜய்யையும் விமர்சித்துள்ளது.. தனது ட்விட்டர் பக்கத்தில் “ மின்சார கண்ணா அதிரடி படை on the floor! தயவு செஞ்சு கரண்ட்டை மட்டும் கட் பண்ணிடாதீங்க சார்… ஒரே அசிங்கமா போய்டும் சார்..!! இப்படிக்கு ப்ரோவின் அரசு..” என்று அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.. மேலும் மின்சார டிரான்ஸ்ஃபார்மர் பெட்டிக்கு தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பு வழங்குவது போன்ற படத்தையும் கிண்டலாக பதிவிட்டுள்ளது.. அதிமுக ஐடி விங்கின் இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது..

RUPA

Next Post

ஆளுங்கட்சியை எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவீங்களா..? திமுக இதை வேடிக்கை பார்க்காது..!உதயநிதி எச்சரிக்கை..!

Wed Jun 24 , 2026
திமுக GEN Z குழு ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தம் தவெக அரசை விமர்சித்து தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.. மேலும் சமீபத்தில் திமுக  GEN Z சந்திப்பு நிகழ்ச்சியையும் நடத்தினார்.. இந்த நிலையில் அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவில் புகுந்து போலீசார் கைது செய்ய முயன்றுள்ளனர்.. எனினும் அவரை கைது செய்ய எதிர்ப்பு கிளம்பியதால் போலீசார் அவரை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.. அன்பானந்தத்தை கைது செய்ய முயற்சித்ததற்கு எதிர்க்கட்சி […]
cm vijay udhanidhi

You May Like