2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார், அதே நேரம், தவெக தலைவர் விஜய், திருச்சி, கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
இதை தொடர்ந்து முதல்வரான ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினானா செய்தார். இவரை தொடர்ந்து அதிமுகவின் மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் மற்றும் விராலிமலை ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் தற்போது தற்போது 6 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன, இந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இவற்றுக்க்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே திமுக திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சி கிழக்கு இடை தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழலில் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் ‘ உங்க அப்பாவையே காணோம்’ என்ற் அகுட்டி கதை சொல்லி முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் தோல்வியை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.. விஜய்யின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு “ சட்டமன்றத்தில் முதல்வர் விஜய், அப்பாவை காணோம் என்கிறார்.. எவ்வளவு விரைவாக வர வேண்டுமோ, அவ்வளவு விரைவாக மீண்டும் சட்டமன்றத்திற்கு வருவார்.. இது உறுதி.” என்று கூறியிருந்தார்.. இதனால் இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிடுகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயம் வந்த திமுக தலைவர் மு.க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த ஸ்டாலின் : தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை, அது குறித்து முடிவெடுத்ததும் சொல்கிறேன்..: என்று தெரிவித்தார்.



