செடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? பலருக்கும் தங்கள் வீடுகளை செடிகளால் அலங்கரிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால், அதற்கான பெரிய தயக்கமாக இருப்பது அவற்றை பராமரிப்பது தான். பல நேரங்களில், தண்ணீர் ஊற்றுவதற்கு நேரம் இல்லாத காரணத்தால் செடிகளை வளர்க்க முடியாமல் போகிறது.
இதனால், குறைந்த பராமரிப்பில் வளரக்கூடிய செடிகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு பலர் வருகின்றனர். அப்படி எளிதில் பராமரிக்கக்கூடிய செடிகளில் ஒன்று மணி பிளான்ட் ஆகும்.
மணி பிளாண்ட் என்பது பராமரிக்க மிகவும் எளிதாக இருப்பதால் பலராலும் விரும்பப்படும் ஒரு உள் அலங்காரச் செடியாகும். பசுமையான இலைகளால் வீட்டிற்கு இயற்கையான அழகையும் குளிர்ச்சியான தோற்றத்தையும் வழங்கும் இது, வீட்டின் சூழலை புத்துணர்ச்சியாக மாற்றும் தன்மை கொண்டது.
இந்தச் செடியின் சிறப்பம்சம் என்னவென்றால், குறைந்த பராமரிப்பிலும், குறைந்த வெளிச்சத்திலும் கூட இது நன்றாக வளரக்கூடியது. ஒரு சிறிய தண்டை வெட்டி தண்ணீர் நிரப்பிய கண்ணாடி பாட்டிலில் வைத்தாலே, சில நாட்களில் வேர்கள் உருவாகி செடி வளரத் தொடங்கும். இதனால் புதிய தோட்டக்காரர்களுக்கும் இது மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.
தண்ணீரில் வளர்க்கும் போது, வாரம் ஒருமுறை தண்ணீரை மாற்றுவது மட்டும் போதுமான பராமரிப்பாக இருக்கும். மண்ணில் வளர்க்க விரும்பினால், நல்ல வடிகால் வசதியுள்ள மண் கலவையைப் பயன்படுத்தி, லேசான ஈரப்பதம் இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டால் இலைகள் மேலும் பளபளப்பாக வளர்கின்றன.
மணி பிளாண்ட் காற்றில் உள்ள சில மாசுகளை குறைக்கும் தன்மை கொண்டதாக பொதுவாக கூறப்படுகிறது. இதனால் இது வீட்டின் வரவேற்பறை, படுக்கையறை அல்லது அலுவலக மேசை போன்ற இடங்களில் வைக்கப்படுகிறது. குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களிலும் இது எளிதாக உயிர்வாழும்.
வாஸ்து மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, இந்தச் செடி வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்றும் செல்வ வளத்தை ஈர்க்கும் என்றும் பலர் நம்புகின்றனர். குறிப்பாக தென்கிழக்கு திசையில் இதனை வைப்பது நல்ல பலனை தரும் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில், குறைந்த செலவு மற்றும் குறைந்த பராமரிப்பில் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இயற்கையான அழகையும் புத்துணர்ச்சியையும் தரக்கூடிய சிறந்த உள் செடியாக மணி பிளாண்ட் விளங்குகிறது.
அலுவலக சூழலில் இந்தச் செடி அமைதியான மனநிலையை உருவாக்க உதவுகிறது என்றும், வேலை அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்றும் நம்பப்படுகிறது. இதனால் பணியில் கவனம் அதிகரித்து முடிவெடுக்கும் திறனும் மேம்படலாம் என்று கருதப்படுகிறது.
அலுவலக மேஜையின் மீது மணி பிளான்ட் செடியை வைக்கும்போது, அது பணியிடத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி பணப்புழக்கத்தை சீராக்க உதவுகிறது. பிசினஸில் சரியான முடிவுகளை எடுத்து முதலீடுகளில் பெருத்த லாபம் ஈட்டுவதற்குத் தேவையான தெளிவான மனநிலையையும் புத்துணர்ச்சியையும் இந்தச் செடி வழங்குவதாக நம்பப்படுகிறது…!!
Also Read: தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்; கடிதம் மூலம் தெரியவந்த அதிரவைக்கும் காரணம்!!!



