“ஒழுங்கா என்கூட உல்லாசமா இரு” இளம்பெண்ணை மிரட்டி, சொந்த மாமா செய்த கொடூரம்!

Women 2025

பெற்றோர்கள் பொதுவாக, தெரியாத நபர்களிடம் பேசவோ பழகவோ கூடாது என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்துவார்கள். இதற்குக் காரணம், அந்நியர்களால் ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சம்தான். ஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பல நேரங்களில் அவர்களுக்குத் தெரிந்த நபர்களாலோ அல்லது நெருங்கிய உறவினர்களாலோ நடைபெறுகின்றன என்பதைக் பல ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தனது சொந்த மாமாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கர் மாவட்டம், ராவத்பாட்டா பகுதியை சேர்ந்தவர் நேஹா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இளம்பெண்ணான நேஹாவிற்கு மகேஷ்வர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாமா உள்ளார். அரசு பணியில் இருந்துவரும் இவருக்கு நேஹா மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் நேஹாவை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். ஆனால், நடந்தவற்றை வெளியே கூறினால் உனது எதிர்காலம் தான் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதனால் பயந்து போன நேஹா, இது குறித்து வெளியே கூறினால் தன்னை தான் பலர் தவறாக நினைப்பார்கள் என்று அஞ்சி உள்ளார், மேலும் தனது படிப்பு, திருமணம் என்று தனது எதிர்காலமே பதித்து விடும் என்று நினைத்துள்ளார் . இதனால், அவர் எதையும் வெளியே கூறாமல் இருந்துள்ளார். நேஹாவின் அச்சத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மகேஷ்வர், அவரை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் இது குறித்து விரக்தி அடைந்த நேஹா, சம்பவம் தொடர்பாக ராவத்பாட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மகேஸ்வரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொந்த மாமாவே இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: பெண்களே கவனம்!!! வேலை தருவதாகக் கூறி இளம்பெண் பலாத்காரம்; விசாரணையில் சிக்கிய சிறுவன் உட்பட 5 பேர்!

Saranya

Next Post

"அம்மா, வலிக்குது…" கதறித் துடித்த குழந்தைகள்; உல்லாசத்திற்கு தடையாக இருந்ததால் சூடு வைத்து சித்திரவதை செய்த பெற்றோர்!

Fri Jul 10 , 2026
தெலங்கானா மாநிலம், சூர்யபேட்டையை சேர்ந்தவர் நகிரிகாந்தி ரவி. லாரி ஓட்டுநரான இவருக்கு இந்து என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு, 5 வயதான தனுஷ் மற்றும் 2 வயதான ரேவந்த் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்களின் வீட்டில் இருந்து அடிக்கடி குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த […]
9cc23e360ec01444b7feb235c82c2d51

You May Like