உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தை சேர்ந்தவர் முகமது நசாகத். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் உத்தரகாண்ட்டை சேர்ந்த அஷ்ரா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனால் இவருக்கு ஆண் குழந்தை இல்லை. இதனால், முகமது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன் படி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, நேகா என்ற பெண் ஒருவரை 2வது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கும் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆண் குழந்தை இவருக்கும் பிறக்கவில்லை. இந்நிலையில், முகமது நசாகத் தற்போது தனது 2வது மனைவி நேகாவின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆனால் அவரது முதல் மனைவி முகமது நிசாகத்தையும், அவரது பிள்ளைகளையும் இவர் கண்டுக்கொள்ளவில்லை.
குடும்ப செலவுக்கும் முகமது பணம் கொடுக்காததால் அவரது முதல் மனைவி மிகவும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த முதல் மனைவி, நேற்று முன்தினம் அஷ்ரா, தாடியால் அவுட்போஸ்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை மேற்கொண்டனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் ஊர் பஞ்சாயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. முகமது நிசாகத், முதல் மனைவி அஷ்ரா, 2வது மனைவி நேகா ஆகியோரை அழைத்து பஞ்சாயத்து நடத்தப்பட்டது. பின்னர் 4 மணிநேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு, முகமது நிசாகத் தனது 2 மனைவியுடனும் வாழ வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி வாரத்தில் 3 நாட்கள் முதல் மனைவியுடனும், அடுத்த 3 நாட்கள் 2வது மனைவியுடனும் முகமது நிசாகத் வாழ வேண்டும்.
மீதமுள்ள ஒரு நாளில் முகமது நிசாகத் தனது விருப்பம் போல் இருந்து கொள்ளலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வாரம் ரூ.500 என்று மாதம் ரூ.2 ஆயிரத்தை முதல் மனைவியின் வீட்டு செலவுக்கு வழங்கும் படி, தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு அவரது 2 மனைவிகளும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து முதல் மனைவி அஷ்ரா போலீசில் கொடுத்த புகாரை திரும்ப பெற்று கொண்டார்.
Also Read: பெற்றோர்களே கவனம்! முட்டைக்குள் இறந்த கோழிக்குஞ்சு… அங்கன்வாடியில் அதிர்ச்சி சம்பவம்!



