கணவனை உதறிவிட்டு வந்த கள்ளக்காதலி..! துடிதுடிக்க காதலன் செய்த கொடூரம்..! விருதுநகரில் அதிர்ச்சி..!

Crime 2026 2

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க மறுத்த ஆத்திரத்தில், 3 வயது பெண் குழந்தையை கொடூரமாக அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டி (23) என்பவரின் மனைவி சுவாதி (22). இவர்களுக்கு விஷ்ணு பிரியா என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது. சுவாதி அப்பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது, அங்குப் பணியாற்றிய திருத்தங்கல் பெரியார் நகரை சேர்ந்த விக்னேஸ்வரன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதற்கிடையே, கணவர் துரைப்பாண்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 25 நாட்களுக்கு முன்பு சுவாதி கணவரை பிரிந்து குழந்தையுடன் வெளியேறினார். பின்னர் திருத்தங்கல் பசும்பொன் நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து, கள்ளக்காதலன் விக்னேஸ்வரனுடன் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார். உறவினர்களும் கணவர் துரைப்பாண்டியும் எவ்வளவோ எடுத்துக்கூறியும், சுவாதி கணவருடன் வாழ மறுத்து விக்னேஸ்வரனுடன் வாழ்வதிலேயே உறுதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான விக்னேஸ்வரன் தினமும் குடித்துவிட்டு வந்து சுவாதியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவும் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த விக்னேஸ்வரன், உல்லாசத்திற்கு அழைத்தபோது சுவாதி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், அங்கிருந்த 3 வயது குழந்தை விஷ்ணு பிரியாவின் தலைமுடியை பிடித்து இழுத்து, முகத்தில் நகத்தால் கீறி, வயிற்றில் சரமாரியாக மிதித்து கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இக்கொடூர சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திருத்தங்கல் காவல்துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலையாளி விக்னேஸ்வரனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடு..!! 3 பேர் உயிரிழந்த சோகம்..!! கனமழையால் பேரதிர்ச்சி சம்பவம்..!!

Next Post

உஷார்! குளிர்பானத்தை குடித்த உடன் மயங்கிய இளம்பெண்… ஆபாச வீடியோ எடுத்து இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்..

Mon Aug 3 , 2026
பெண்கள் பணிபுரியும் இடங்களில்கூட பாதுகாப்பு குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நட்பு என்ற பெயரில் பெண்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற குற்றங்கள் பெண்களின் மனநலனையும், பாதுகாப்பு உணர்வையும் கடுமையாக பாதிக்கின்றன. பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. சென்னையைச் சேர்ந்த பிரியா (பெயர் […]
Video 2025

You May Like