நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடு..!! 3 பேர் உயிரிழந்த சோகம்..!! கனமழையால் பேரதிர்ச்சி சம்பவம்..!!

Kartanaka 2026

கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக ஷிவ்மோகா மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருந்தது. இதனால், மலைப்பகுதிகளில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் ஷிவ்மோகா மாவட்டம் மலநாடு மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கொட்டகையின் மீது மண் சரிந்து விழுந்தது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். எனினும், அந்தக் கொட்டகையில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

அதிகாலை நேரத்தில் குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள கொட்டகையில் தங்கியிருந்த ஹனுமந்தா என்ற நபர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். இறந்த 3 பேரும் கொப்பல் மாவட்டம் கொக்கரேகரு கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன், மனைவி நாகவேணி மற்றும் அவர்களது மகன் சந்தோஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Read More : அப்பளம் போல் நொறுங்கிய கார்..!! 5 பேர் துடிதுடித்து மரணம்..!! பொள்ளாச்சியில் சோகம்..!!

Next Post

ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது.? இன்று இதை செய்தால் அதிர்ஷ்டம் பெருகும்..!

Mon Aug 3 , 2026
தமிழர்களின் பாரம்பரிய சிறப்புமிக்க முதன்மை பண்டிகைகளில் ஒன்றான ‘ஆடிப்பெருக்கு’ திருநாள் இன்று மாநிலம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இயற்கையின் கொடையையும், ஜீவநதிகளையும் போற்றி வணங்கும் ஆடிப்பெருக்கு, பருவமழை காலத்தில் ஆறுகளில் நீர்மட்டம் நிறைந்து வழிவதை கொண்டாடும் ஒரு முதன்மையான நன்னாளாகும். வரலாற்று ரீதியாக புதிய விவசாயப் பருவத்தின் தொடக்கமாக விளங்கும் இந்நாளில், நல்ல மழைப்பொழிவு, வளமான நிலம் மற்றும் நல்விளைச்சலுக்காக விவசாயிகள் காவிரித் தாய்க்கும் நீர் தேவதைகளுக்கும் சிறப்பு வழிபாடுகளை […]
River 2026 2

You May Like