முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை பனையூரில் நடந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக சாடினார்.
இதுதொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், இன்னும் ஆறு மாத காலத்திற்குப் பிறகு திமுகவினர் வீட்டை விட்டு வெளியே கூட வர முடியாத நிலை ஏற்படும். தேர்தலில் கடுமையான தோல்வியை சந்தித்த பிறகும் உதயநிதிக்கு திமுகவில் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இனி கருணாநிதி குடும்பத்திலிருந்து வேறு யாரும் முதலமைச்சராக வர முடியாது என்றார்.
அரசியல் களத்தில் அவதூறு பேசுவது என்பது திமுகவுக்குப் புதிதல்ல என்றும், அது கருணாநிதி காலத்திலேயே தொடங்கிவிட்ட ஒன்று என்றும் குற்றம்சாட்டினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் பற்றியே அவதூறாகப் பேசியவர் கருணாநிதி எனக் குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலகட்டத்திலும் திமுகவினர் அவரை மோசமாக விமர்சித்ததை சுட்டிக்காட்டினார். ஆனால், முதல்வர் விஜய் இதுவரை பெண்களைப் பற்றி ஒருபோதும் தவறாகப் பேசியதில்லை என்றும், திமுக தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்காமல் அவர்களின் ஊழல்கள் குறித்து மட்டுமே பேசி வருகிறார் என்றும் கூறினார்.
சட்டமன்றத்திற்கு ‘வாயைத் திறங்க சிஎம்’ என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ் அணிந்து வரும் திமுகவினர், முதல்வர் விஜய் பேசத் தொடங்கியதும் அங்கிருந்து கிளம்பி விடுவதாக கூறினார். அத்துடன், நினைத்திருந்தால் தவெகவால் கட்சி நிதியைத் திரட்டியிருக்க முடியும் என்றும், முழு அதிகாரம் கையில் வந்த பிறகும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதாலேயே முதல்வர் விஜய் அதை வேண்டாம் என மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெகவின் வெற்றிக்குக் காரணியாக விளங்கும் பெண்களுக்குத் தாம் நேர்மையாக இருக்க விரும்புவதாகத் தெரிவித்தார். பெண்களை யார் இழிவாகப் பேசினாலும் அவர்களைக் கைது செய்வோம் என்றார். உதயநிதி தொடர்ந்து ஆபாசமாகப் பேசி வருவதால், இனி அவரை உதயநிதி என்று அழைக்காமல் ‘ஆபாசநிதி’ என்றே அழைக்க வேண்டும் என்று கூறினார். 60 ஆண்டு வரலாற்றையே மாற்றிய தவெகவுக்கு எதிராக நிற்பதற்கு கூட திமுகவுக்குத் தகுதி இல்லை என்று விமர்சித்தார்.
“பெண்களை நோக்கி ஆபாசமாக பேசும் பொது யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.”- அமைச்சர் @AadhavArjuna 💥💥💥 pic.twitter.com/jn3u6TZGnv
— Sαíndαví_Súrєn❤️ (@saindavai) August 4, 2026
Read More : ஜாமீனில் வெளியே வந்தார் உதயநிதி..! வாண வேடிக்கையுடன் கொண்டாடிய திமுக தொண்டர்கள்..!



