ஜாமீனில் வெளியே வந்தார் உதயநிதி..! வாண வேடிக்கையுடன் கொண்டாடிய திமுக தொண்டர்கள்..!

Udhayanidhi 2026

முதல்வர் விஜய், நடிகை திரிஷா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணையை முடித்த காவல்துறையினர், அவரை காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.


தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தவெக மகளிரணி தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினர் உதயநிதியை கைது செய்தனர்.

பின்னர், சென்னையில் இருந்து சுமார் 8 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மற்றும் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், உதயநிதியிடம் பல மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, நீண்ட நேர விசாரணை நிறைவடைந்து உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். செங்கிப்பட்டி காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த அவரை, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் முழக்கமிட்டு வரவேற்றனர்.

Read More : Red Alert | 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

Next Post

ஃப்ரிட்ஜில் எல்லா பழங்களையும் வைக்கலாமா?… உணவியல் நிபுணர்கள் சொல்லும் முக்கிய தகவல்!

Wed Aug 5 , 2026
இன்றைய காலத்தில் பழங்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, வாங்கியவுடன் அனைத்துப் பழங்களையும் ஃப்ரிட்ஜில் வைப்பது பலரின் வழக்கமாக உள்ளது. ஆனால், எல்லா பழங்களையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் என்பது தவறான நம்பிக்கை. சில பழங்களுக்கு குளிர்சாதனப் பெட்டி நல்லது என்றாலும், சில பழங்களின் சுவை, மணம் மற்றும் தரம் பாதிக்கப்படலாம் என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வாழைப்பழம், […]
fruits 2 1

You May Like