“கடும் தண்டனை பெற்று தருவேன்” கோவை சிறுமி கொலை வழக்கு.. பெற்றோருக்கு தொலைப்பேசியில் ஆறுதல் கூறிய CM விஜய்..!

Vijay 2025 1

கோயம்புத்தூர் மாவட்டத்தை அடுத்த சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஜோசப் விஜய் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். “கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய மனிதநேயமற்ற குற்றங்கள் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. குற்றவாளிகளுக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு உறுதியுடன் செயல்படும்” என முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் அமைச்சர்களான விஜய் தமிழன் மற்றும் சம்பத் குமார் சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து பேசிய அவர், “குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தப்பிக்க முடியாது” என்று முதலமைச்சர் விஜய் உறுதி அளித்ததாக உயிரிழந்த சிறுமியின் பாட்டி பேட்டி அளித்துள்ளார்.

Read more: ஹீட் ஸ்ட்ரோக்கால் ஒரே நாளில் 51 பேர் உயிரிழப்பு.. ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

Next Post

"94% பேர் இந்திய ஃபாலோவர்ஸ்!" பாகிஸ்தான் ஆதரவு குற்றச்சாட்டுக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் பதிலடி..!

Sun May 24 , 2026
"94% are Indians!" The founder of the Karapanpoochchi Janata Party responds to the accusation of supporting Pakistan..!
cjpinstagramfollowers1 1779594571

You May Like