மனைவி கர்ப்பமாக இருந்த நேரத்தில்… வீட்டு வேலைக்கு வந்த பெண்ணுடன் காதல்; இறுதியில் நடந்த கொடூரம்!

WhatsApp Image 2026 08 07 at 11.57.13 AM

ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை, நெருக்கமாக பழகிய ஒருவருடனான உறவு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு, அவரது உடலை சூட்கேஸில் மறைத்து ஒடிசாவுக்கு ரயிலில் கொண்டு சென்று வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் டிரைவரான போலிசெட்டி சுரேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


சுரேஷின் மனைவி கர்ப்பமாக இருந்த காலத்தில், வீட்டு வேலைகளுக்கு உதவுவதற்காக இளம்பெண் ஒருவர் பணிக்கு வந்துள்ளார். அப்போது சுரேஷுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமாக மாறியுள்ளது. சுரேஷின் மனைவி தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த நேரத்தில், இளம்பெண் சுரேஷை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், சுரேஷ் இளம்பெண்ணை தாக்கியுள்ளார். இதில் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கொலையை மறைக்க திட்டமிட்ட சுரேஷ், இளம்பெண்ணின் உடலை ஒரு பெரிய சூட்கேஸுக்குள் வைத்து மூடியுள்ளார். பின்னர் சூட்கேஸுடன் ரயிலில் ஒடிசா மாநிலம் ராயகடா பகுதிக்கு சென்ற சுரேஷ், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த பகுதியில் சூட்கேஸை வீசிவிட்டு மீண்டும் விசாகப்பட்டினம் திரும்பியுள்ளார்.

ராயகடா பகுதியில் கிடந்த சூட்கேஸை பொதுமக்கள் கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கிய போலீசார், கிடைத்த தடயங்களை வைத்து விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷை அடையாளம் கண்டனர். இதையடுத்து ஒடிசா போலீசார் விசாகப்பட்டினம் சென்று சுரேஷை கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக ஆந்திரா மற்றும் ஒடிசா போலீசார் இணைந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 2 காதலர்கள்… 5 பேர்!… 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Saranya

Next Post

பள்ளிக்குள் துப்பாக்கிச்சூடு... மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 7 பேர் பலி; 15 பேர் படுகாயம்!

Fri Aug 7 , 2026
பள்ளி என்றாலே மாணவர்களின் பாதுகாப்பான உலகமாக இருக்க வேண்டும். ஆனால், துப்பாக்கிச்சூடு போன்ற கொடூர சம்பவங்கள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே அரங்கேறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், தாய்லாந்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தின் பாங்காக்கின் வடமேற்கு பகுதியில் உள்ள நொந்தபுரி மாகாணத்தின் பாங் க்ருவாய் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள […]
4a1cd376b3e95a95edb32427bf40dee6a34690635bb12d603558cbf417199a4d

You May Like