அந்தரங்க படங்களை காட்டி..! கோடிகளை கொட்டிக் கொடுத்த தொழிலதிபர்கள்..! இளம்பெண்ணின் மெகா ஸ்கெட்ச்..!

Crime 2026 3

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்பவர், பல்வேறு பெயர்களில் போலியாக சமூக ஊடகக் கணக்குகளை தொடங்கி வந்துள்ளார். இதன்மூலம் முகம் தெரியாத பல ஆண்களுடன் நட்பாக பழகி, அவர்களை தனது வலையில் வீழ்த்தியுள்ளார். ஆரம்பத்தில் இனிமையாக பேசி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் இவர், தனியறைகளில் அவர்களுடன் இருக்கும் தருணங்களை ரகசியமாகப் படம் பிடிப்பதையும், ஆபாசப் படங்களைப் பரிமாறிக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.


அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட ஆண்களை மிரட்டத் தொடங்குவார். பணம் தர மறுத்தால் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி போன்ற பொய் வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாகவும், சமூகத்தில் மானத்தை வாங்கி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அவமானத்திற்கும் பயந்து, பல தொழிலதிபர்களும் முக்கியப் புள்ளிகளும் அவரிடம் பல லட்சங்களையும், கோடிகளையும் வாரி வழங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, மெத்தை முழுவதும் அடுக்கப்பட்ட பணக்கட்டுகளின் மீது பல்லவி சிங் படுத்துக் கிடப்பது போன்றும், துப்பாக்கியுடன் போஸ் கொடுப்பது போன்றும் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் பரவிப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பல்லவி சிங்கின் மிரட்டலுக்குப் பணியாத 5 பேர் மீது ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் “சுவீட்டி திவாரி” என்ற போலிப் பெயரிலும் கணக்கு தொடங்கி பலரை ஏமாற்றியுள்ள அவர், இந்த மோசடிகளுக்குத் தனது இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் நண்பர்களைப் பயன்படுத்தியுள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள பல்லவி சிங் உள்ளிட்ட 5 பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read More : கையில் “நாட்டாமை குடும்பம்” டாட்டூ இருக்கா? உடனே என்னை சந்திக்கலாம்..!! சரத்குமார் பரபரப்பு அறிவிப்பு..!!

Next Post

தவெக அரசின் 100 நாள் சாதனை..!! பட்டியலை தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு..!!

Mon Aug 10 , 2026
தமிழகத்தில் தவெக அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவடையும் தருவாயில், இதுவரை அரசால் செயல்படுத்தப்பட்ட முக்கியச் சாதனைகள் மற்றும் முன்னோடித் திட்டங்கள் குறித்த துறைவாரியான அறிக்கையை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதவியேற்றது முதல் ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மற்றும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை விரைவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதனடிப்படையில், 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் திட்டங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து […]
cm vijay speech

You May Like