கையில் “நாட்டாமை குடும்பம்” டாட்டூ இருக்கா? உடனே என்னை சந்திக்கலாம்..!! சரத்குமார் பரபரப்பு அறிவிப்பு..!!

Sarathkumar 2026

நடிகரும் பாஜக மூத்த நிர்வாகியுமான சரத்குமார், தன்னை எளிதில் காண்பதற்கு ஆதரவாளர்கள் கையில் ‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தமது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஆதரவாளர்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய சரத்குமார், ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்குள் ஒரு நெருங்கிய பிணைப்பை உருவாக்கவும் இத்தகைய யோசனையை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.

தமது எண்ண ஓட்டத்தில் திடீரென தோன்றிய யோசனையே இதுவென குறிப்பிட்ட அவர், ‘நாட்டாமை குடும்பம்’ என்று பச்சை குத்திக் கொள்வது ஒரு குடும்ப அடையாளமாக இருக்கும் என்றும், தன்னை காண வரும் தொண்டர்களுக்கு இதுவொரு ‘கிரீன் கார்டு’ போன்று செயல்பட்டு தன்னை நேரடியாகவும், எளிதாகவும் சந்திக்க உதவும் என்று தெரிவித்தார்.

சரத்குமாரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த ‘நாட்டாமை’ திரைப்படத்தின் பெயரை தமது ஆதரவாளர்களின் அடையாளமாக அவர் தேர்வு செய்துள்ளார். தொண்டர்களையும், ரசிகர்களையும் கவரும் வகையில் அவர் முன்வைத்துள்ள இந்த பச்சை குத்தும் பிரசார உத்தி தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Read More : திமுக MLA அனிதா ராதாகிருஷ்ணனுக்கு என்ன ஆச்சு..? மருத்துவமனையில் அட்மிட் ஆனதால் தொண்டர்கள் அதிர்ச்சி..!!

Next Post

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை..!! தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்..!!

Sun Aug 9 , 2026
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாநகர், புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. வடபழனி, நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்வதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், கனமழை மற்றும் சூறைக்காற்றால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், சுமார் 6 […]
Rain Flight 2026

You May Like