தவெக அரசின் 100 நாள் சாதனை..!! பட்டியலை தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு..!!

cm vijay speech

தமிழகத்தில் தவெக அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவடையும் தருவாயில், இதுவரை அரசால் செயல்படுத்தப்பட்ட முக்கியச் சாதனைகள் மற்றும் முன்னோடித் திட்டங்கள் குறித்த துறைவாரியான அறிக்கையை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


பதவியேற்றது முதல் ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மற்றும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை விரைவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதனடிப்படையில், 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் திட்டங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தற்போது பார்ப்போம்.

➣ லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களைப் பொதுமக்கள் உடனடியாகப் பதிவு செய்யத் பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையின் திடீர் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

➣ பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பிரத்யேக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ உருவாக்கப்பட்டுள்ளது.

➣ கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன், குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.134 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

➣ பொதுமக்களின் மாதாந்திர சுமையை குறைக்கும் வகையில் 200 யூனிட் இலவச மின்சார திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

➣ மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

➣ ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன.

➣ சட்டவிரோத குவாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் ஏற்றுமதி செய்வதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.

➣ பத்திரப்பதிவுத் துறையில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

➣ குடிநீர் கட்டமைப்பை வலுப்படுத்த ‘ஜல் ஜீவன் 2.0’ திட்டம் மத்திய அரசுடன் கலந்தாலோசித்துத் தொடங்கப்பட்டுள்ளது.

➣ அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் உள்ளிட்ட பல புதிய அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

➣ வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் 100 நாட்கள் நிறைவு பெறவுள்ள நிலையில், இந்த சாதனைகளை தொகுத்து முழுமையான அறிக்கையாக தயாரிக்கும் பணியில் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More : கையில் “நாட்டாமை குடும்பம்” டாட்டூ இருக்கா? உடனே என்னை சந்திக்கலாம்..!! சரத்குமார் பரபரப்பு அறிவிப்பு..!!

Next Post

எந்த நிலையில் தூங்கினால் உடலுக்கு நல்லது?… தெரிஞ்சுக்கோங்க!

Mon Aug 10 , 2026
ஒருவருக்கு பக்கவாட்டில் படுத்து தூங்குவது வசதியாக இருக்கலாம். மற்றொருவருக்கு முதுகில் படுத்து தூங்குவது சௌகரியமாக இருக்கலாம். உண்மையில், அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே சிறந்த தூங்கும் நிலை என்று எதுவும் இல்லை. ஒருவரின் வயது, உடல் நிலை, உடல் அமைப்பு மற்றும் தனிப்பட்ட சௌகரியம் ஆகியவற்றைப் பொறுத்து தூங்கும் நிலையைத் தேர்வு செய்வது முக்கியம். பக்கவாட்டில் படுத்து தூங்குவது நல்லதா? பலருக்கு பக்கவாட்டில் படுத்து தூங்குவது சௌகரியமாக இருக்கும். இந்த நிலையில் […]
sleep 1

You May Like