சாணக்கியர் கூறும் 3 முக்கிய வாழ்க்கைப் பாடங்கள்… மதிப்பும் மரியாதையும் கிடைக்க இதை கடைப்பிடிங்க!

chanakya niti for enemies 1 1

சாணக்கியர் சிறந்த சிந்தனையாளர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் ஆலோசகராக அறியப்படுகிறார். அவர் எழுதியதாகக் கூறப்படும் ‘சாணக்கிய நீதி’ நூலில், ஒருவர் வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் இடம்பெற்றுள்ளன. சமூகத்தில் சிலருக்கு அதிக மரியாதையும் மதிப்பும் கிடைக்கிறது. அவர்களுக்கு தேவையான நேரங்களில் உதவுவதற்கும் பலர் முன்வருகிறார்கள். அதே நேரத்தில், சிலருக்கு சமூகத்தில் உரிய மதிப்போ மரியாதையோ கிடைப்பதில்லை. அவர்களுக்கு உதவவும் பலர் தயங்குகிறார்கள். ஒருவரின் இந்த நிலைக்கு அவரது குணநலன்களும், நடத்தையும் முக்கிய காரணமாக இருக்கலாம் என சாணக்கியர் கூறுகிறார்.


எனவே, வாழ்க்கையில் நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்வது அவசியம் என அவர் வலியுறுத்துகிறார். முதலில், ஒருவர் தனது சுயமரியாதையை எப்போதும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் தன்னைத் தானே மதிக்காமல் இருந்தால், மற்றவர்களிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்க முடியாது. கண்ணியத்துடனும் மதிப்புடனும் வாழ்க்கையை நடத்த விரும்புபவர்கள் தங்களின் சுயமரியாதையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பது சாணக்கியரின் கருத்தாகும்.

அதேபோல், ஒருவர் பேசும் வார்த்தைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் கொடுத்த வாக்குறுதியை எக்காரணம் கொண்டும் மீறாமல் இருப்பது முக்கியம். ஒருவருக்கு அளித்த வாக்கை காப்பாற்றும்போது, அவர்களிடம் நம்பிக்கையும் மரியாதையும் அதிகரிக்கும். சொன்ன வார்த்தையை நிறைவேற்றும் பழக்கம் ஒருவரின் நற்பெயரையும் உயர்த்தும்.

நேரத்துக்கும் ஒருவர் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் ஒரு விஷயத்தை செய்து முடிப்பது அல்லது ஒருவருக்கு கொடுத்த நேரத்தை மதிப்பது நல்ல பண்பாக கருதப்படுகிறது. சொன்ன வார்த்தையையும், கொடுத்த நேரத்தையும் மதித்து நடப்பவர்களுக்கு சமூகத்தில் நம்பிக்கையும் மரியாதையும் அதிகமாக இருக்கும் என சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வாழ்க்கையில் மற்றவர்களின் மதிப்பையும் மரியாதையையும் பெற விரும்புபவர்கள் சுயமரியாதை, வாக்கை காப்பாற்றுதல், நேரத்தை மதித்தல் போன்ற நல்ல பண்புகளை கடைப்பிடிப்பது அவசியம் என சாணக்கிய நீதியின் கருத்துகள் எடுத்துரைக்கின்றன.

Also Read: அடிக்கடி மாத்திரை போடும் பழக்கம் இருக்கா..? சீக்கிரமே உங்களுக்கு இந்த பிரச்சனைகள் வரும்..!!

Saranya

Next Post

“2035-க்குள் இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம்”..! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு..!

Mon Aug 10 , 2026
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வரும் 2035ஆம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கான தனித்துவமான விண்வெளி நிலையத்தை விண்ணில் அமைக்கும் இலக்குடன் செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சுமார் 300 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான இலக்கு இஸ்ரோவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோடியாக, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மனிதரில்லா சோதனை விண்கலம் நடப்பாண்டிற்குள் ஏவப்படவுள்ளதாகவும் […]
Space Station 2026

You May Like