நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் நடிகை நிகிதா ராவலை அதிர்ச்சியிலும் சங்கடத்திலும் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தி திரையுலகில் நடிகையாகவும் நடனக் கலைஞராகவும் அறியப்படும் நிகிதா ராவல், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அங்கு வழக்கம்போல் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்ததுடன், ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது பெண் ரசிகை ஒருவர் நிகிதாவை அணுகி அவருடன் செல்ஃபி எடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இருவரும் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தபோது, அந்த ரசிகை திடீரென நிகிதாவின் கன்னத்தில் முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து எதிர்பாராத விதமாக அவரை தன் பக்கம் இழுத்து உதட்டில் முத்தமிட முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திடீரென நடந்த இந்த செயலால் நிகிதா ராவல் அதிர்ச்சியடைந்ததுடன், அந்த ரசிகையை விலக்க முயன்றதாகவும் தெரிகிறது. இருப்பினும், அந்தப் பெண் தொடர்ந்து நிகிதாவை பிடித்துக் கொண்டிருந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் தலையிட்டு அந்த ரசிகையை அங்கிருந்து வெளியேற்றினர்.
எதிர்பாராத இந்த சம்பவத்தால் நிகிதா ராவல் வெளிப்படையாகவே அதிர்ச்சியுடனும் சங்கடத்துடனும் காணப்பட்டார். நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Also Read: கடையில் கிடைக்கும் டீ போல வீட்டிலும் சுவையான டீ வேண்டுமா?… இதை மட்டும் செய்யுங்க!



