இந்தியாவில் யுபிஐ தொடங்கபட்ட காலத்திலிருந்தே நுகர்வோருக்கு முற்றிலும் இலவசமாகவே வழஙகபட்டு வருகிறது. எதிர்காலத்திலும் ஒவ்வொரு இந்தியரும் எவ்விதமான பரிவர்த்தனை கட்டணமும் இன்றி இந்த உடனடி டிஜிட்டல் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் ‘வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் மசோதா 2026’ மீதான விவாதத்தின் போது பேசிய அவர், இந்த மசோதாவானது 2007-ஆம் ஆண்டின் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைகள் சட்டத்தின்’ பிரிவு 10A-வில் சில திருத்தங்களை முன்மொழிகிறது என்று கூறினார். இந்த திருத்தமானது அரசிற்கு சில சட்டபூர்வமான அதிகாரங்களை வழங்கும் ஒரு நடைமுறை ஏற்பாடே தவிர, யுபிஐ பயனர்கள் மீது உடனடியாக எந்தவொரு வரியையோ அல்லது பரிவர்த்தனை கட்டணத்தையோ விதிக்காது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்த சட்ட திருத்தத்தின் மூலம் எந்தெந்த மின்னணு பணப்பரிவர்த்தனை முறைகளுக்கு கட்டண விலக்கு மற்றும் சட்ட பாதுகாப்பு தொடர்ந்து வழஙகபடும் என்பதை அரசு தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வாயிலாக குறிப்பிடும் என்று விளக்கினார். மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட பிறகு, தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தலைமையிலான யுபிஐ மற்றும் சேவைகள் வழிகாட்டுதல் குழுவே மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் (MDR) எனப்படும் வணிக கட்டணம் குறித்து முடிவெடுக்கும்.
வணிக கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமா, அவ்வாறு கொண்டுவரப்பட்டால் அதன் வரம்புகள் மற்றும் நடைமுறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அக்குழுவே பரிசீலிக்கும் என்றும், தற்போதைய சூழலில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான எவ்வித எம்.டி.ஆர். கட்டண முறையும் இறுதி செய்யபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
Read More : ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றமா..? அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்..!! கூட்டுறவுத்துறை அதிரடி..!!



