உறுதியாகிறதா திமுக – பாஜக கூட்டணி..? வானதி சீனிவாசன் பேட்டியால் அரசியலில் பரபரப்பு..!!

Vanathi Stalin 2026

தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ள புதிய அரசின் வருகைக்கு பிறகு, மாநில அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைந்துள்ளனர். இதனிடையே, திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே எதிர்காலத்தில் கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் உலா வந்தன.


இது தொடர்பான கேள்விக்கு அண்மையில் பதிலளித்த திமுக எம்பி கனிமொழி சோமு, “அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது. தமிழகத்தின் நலனுக்கு எது நல்லதோ, அது எங்கிருந்து வந்தாலும் அதை நாங்கள் கண்டிப்பான முறையில் ஆமோதிப்போம், வரவேற்போம்” என குறிப்பிட்டார்.

அவரது இந்த கருத்து குறித்து பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை” என தெரிவித்தார். மேலும் திமுக – பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்களுக்குப் பதிலளித்த அவர், “அப்படி ஒரு கூட்டணி உருவாகும் போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்; கூட்டணி அமைவதற்கு முன்பாகவே நீங்களாகவே ஒரு கூட்டணியை உருவாக்கி விடுவீர்கள் போலிருக்கிறது” என பதிலளித்தார்.

Read More : வீடு புகுந்து தாய், மகளை வெட்டி சாய்த்த காதலன்..! பல்லடத்தில் கொடூரம்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Next Post

விஜயின் 2-வது திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சங்கீதா..! வீட்டில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை..!

Tue Aug 11 , 2026
முதல்வர் விஜய், அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது தொடர்பான பல்வேறு தகவல்களும் கேள்விகளும் இணையத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. முன்னதாக, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விவாகரத்து மனுவை, கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அம்மனு முடித்து வைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. கணவருடன் இணைந்து வாழ முடியாது என்ற […]
Vijay Sangeetha 2026

You May Like