தீயில் சிக்கிய தாய்..! ராம்நாத் கோவிந்த் வாழ்வில் நடந்த பெருந்துயரம்..! உருகிய பிரதமர் மோடி..!

Modi 2026

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ராம்நாத் கோவிந்த வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவம் பற்றி கூறினார். ராம்நாத் கோவிந்த் இப்போது ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அது பற்றி சுயசரிதையிலும் எழுதி இருக்கிறார்.


கோவிந்த் சிறுவனாக இருந்தபோது, ஒரு கோடை காலத்தில் அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவரது தாயார் தமது உயிரை பற்றிக்கூட கவலைப்படாமல், எரிந்து கொண்டிருந்த வீட்டுக்குள் இருந்த பொருட்களை பத்திரப்படுத்த முயன்றார். ஒரு சாதாரண குடும்பத்தை பொறுத்தவரை, குழந்தைகளை வளர்ப்பதற்கு ஒவ்வொரு பொருளும் மிகவும் அவசியமானது.

ஆனால், அந்த முயற்சியில் துரதிஷ்டவசமாக, கோவிந்தின் தாய் தீயில் சிக்கி இறந்துவிட்டார். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்; மிகவும் இளம் வயதில் இத்தகைய துயரத்தை எதிர்கொள்வதும், தாயை இழப்பதும் எவ்வளவு வேதனை மிக்கதாக இருந்திருக்கும்.

என் தாயார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து எனக்கு தொடர்ந்து ஆசி வழங்கினார். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. இருப்பினும், அவர் இல்லாததால் ஏற்பட்ட அந்த வெறுமையை இன்றும் கூட நான் ஆழமாக உணர்கிறேன் என்று பிரதமர் மோடி உருக்கமாக கூறினார்.

Read More : “இது ரீல்ஸ் காலம்.. ஜாக்கிரதையாக இருங்கள்”..! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!

Next Post

ஆக.14-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கலெக்டர்..!!

Wed Aug 12 , 2026
தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பரலோக மாதா பேராலயத்தின் விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாவட்த்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில் தூத்துக்குடி மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவது வழக்கம். இந்த […]
school student

You May Like