ஆக.14-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கலெக்டர்..!!

school student

தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பரலோக மாதா பேராலயத்தின் விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாவட்த்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில் தூத்துக்குடி மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விண்ணேற்பு பெருவிழா நடைபெறவுள்ளதை அடுத்து, பொதுமக்களின் வசதிக்காக ஆகஸ்ட் 14 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பின்னர் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : “இது ரீல்ஸ் காலம்.. ஜாக்கிரதையாக இருங்கள்”..! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!

Next Post

முதல்வர் விஜயின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு..!! பிரம்மாண்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

Wed Aug 12 , 2026
தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கு புதிய வேகம் கொடுக்கும் நோக்கில், மாநில அரசு ஒருங்கிணைக்கும் பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் மாநாடு நாளை சென்னையில் நடைபெறுகிறது. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த முக்கிய நிகழ்விற்கு முதலமைச்சர் விஜய் தலைமை தாங்குகிறார். இதில் நாட்டின் முன்னணித் தொழில் அதிபர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள உள்ளனர். மாநிலத்தில் தொழிற்கட்டமைப்பை […]
cm vijay new

You May Like