தந்தையின் மறைவு… மெஸ்ஸியின் உருக்கமான பதிவு!. ஓய்வு குறித்து சூசகம்!. ரொனால்டோ ஆறுதல்!

messi crying

அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி மறைந்ததைத் தொடர்ந்து கால்பந்து விளையாட்டு உலகிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தனது தந்தையின் இழப்பிற்குப் பிறகு விளையாட்டுக்கு சிறிது காலம் இடைவெளி விட்டுள்ள மெஸ்ஸி, தனது எதிர்காலம் குறித்தும் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தைக்கு அஞ்சலி செலுத்திப் பதிவிட்டுள்ள மெஸ்ஸி, “அப்பா, நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டீர்கள் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நீங்கள் இனி இல்லை, இனி நாம் பேசப்போவதில்லை என்பதை நினைத்துப் பார்க்கவே மிகவும் கடினமாக உள்ளது. உங்களுக்கு உடல்நலக் குறைவு இருந்தது, நீங்கள் அதிக வலியால் துடித்தீர்கள் என்பது தெரியும்; ஆனால் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுச் செல்வீர்கள் என்று நினைக்கவில்லை” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் போது தனது தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக கூறியுள்ள மெஸ்ஸி, “கடைசி உலகக்கோப்பையில் நான் விளையாட வேண்டும் என்று நீங்கள் மிகவும் ஆசைப்பட்டீர்கள். போட்டி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் உங்கள் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நான் இறுதிப்போட்டி வரை முன்னேறினால் நீங்கள் நேரில் வந்து பார்ப்பீர்கள் என்று நம்பினேன். இறுதிப்போட்டிக்குச் சென்றும் உங்களால் வர முடியவில்லை. கோப்பையை வென்று உங்களிடம் காட்ட வேண்டும் என என் உடலையும் மீறிப் போராடினேன், ஆனால் அது முடியவில்லை” என்று தனது வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார்.

கால்பந்து வாழ்க்கை குறித்துப் பேசிய மெஸ்ஸி, “நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. எனது வாழ்நாள் முழுவதும் நான் செய்தது கால்பந்து விளையாடுவது மட்டுமே. ஆனால் இனிமேலும் அதைத் தொடர்ந்து செய்வேனா என்பதில் எனக்குத் தீவிர சந்தேகம் உள்ளது. ஆரம்பத்திலிருந்தே என் கூடவே இருந்த நீங்கள், முடிவுக்கு இன்னும் சில காலம் மட்டுமே இருந்த நிலையில் ஏன் எங்களை விட்டுச் சென்றீர்கள்?” என்று வேதனையுடன் பேசியுள்ளார்.

மெஸ்ஸியின் இந்த உருக்கமான பதிவிற்கு அவரது நீண்டகால போட்டியாளரும் போர்ச்சுகல் அணியின் தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். மெஸ்ஸியின் பதிவில் கருத்து தெரிவித்த ரொனால்டோ, “இந்தக் கடினமான தருணத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது அன்பான அரவணைப்புகள் லியோ. உங்களுக்கு மிகுந்த மனவலிமை கிடைக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

"எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே"!. ஹார்முஸ் முழுமையாக அமெரிக்கா கட்டுப்பாட்டில் வந்துவிட்டது!. டிரம்ப் அறிவிப்பால் பதற்றம்!

Thu Aug 13 , 2026
உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான ‘ஹார்முஸ் நீரிணை’ அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், அதனைத் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கப் போவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் தடையை “இரும்புச் சுவர்” என்று குறிப்பிட்டுள்ளதோடு, இதற்கு எதிராக ஈரானால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். ஈரானின் ராணுவ […]
donald trump new

You May Like