“ச்சீ! 60 வயது முதியவர் செய்யும் காரியமா இது?”… விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

depositphotos 201999982 stock photo old age hands old man

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பெற்றோர் மட்டுமின்றி சமூகத்தின் ஒவ்வொருவருக்கும் முக்கியப் பங்கு உள்ளது. இந்த நிலையில், மயிலாப்பூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு, 9 வயது சிறுமி தனது தாயுடன் மயிலாப்பூரில் உள்ள தாத்தா வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது வீட்டின் வெளியே சிறுமி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.


அந்த நேரத்தில், அருகில் வசித்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த பாபு (60) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். பத்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எஸ். அனிதா ஆஜராகி, வழக்கின் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

வழக்கின் விசாரணை முடிவில், சிறுமிக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்ட பாபுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதிலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பும் ஆதரவும் கிடைப்பதை உறுதி செய்வதிலும் சட்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Also Read: பிரியாணியை விட்ட சிலம்பரசன்!… சைவ உணவுக்கு மாறியது ஏன்?

Saranya

Next Post

வெற்றி மேல் வெற்றி!. 100 நாட்களில் 1 லட்சம் கோடி முதலீடு!. முதல்வர் விஜய் சாதனை!. இளைஞர்களுக்கும் ஜாக்பாட்!.

Thu Aug 13 , 2026
சென்னையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’-ல், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் புதியதாக 1,06,998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய புதிய தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களிலேயே மாநிலத்திற்குள் ரூ.1,02,514 கோடி அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் ரூ.4,476 கோடி மதிப்பிலான 8 புதிய […]
vetritamilnaducmvijay

You May Like