மகாராஷ்டிர மாநிலம் ஜள்காவ் மாவட்டம் வறன்காவ் பகுதியில், மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறிச் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தாத்தா வயதுடைய 4 முதியவர்களை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை அணுகிய இந்த 4 முதியவர்களும், இனிப்புகள் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி சாதுரியமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்திற்குச் சென்று சிறுமியை மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
சம்பவத்திற்குப் பிறகு வீட்டிற்குத் திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அழுதுகொண்டே பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், தாமதிக்காமல் உடனடியாக வறன்காவ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், போக்ஸோ உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய 4 முதியவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாத்தா வயதில் உள்ள நபர்களே பிஞ்சுச் சிறுமியிடம் இத்தகைய மிருகத்தனமான குற்றத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதானவர்களுக்கு நீதிமன்றம் மூலம் மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விரைந்து நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Read More : வசமாக சிக்கினார் மாஜி அமைச்சர் எ.வ.வேலு..! லஞ்ச ஒழிப்புத்துறையில் பரபரப்பு புகார்..!



