பிரேமலதா நிற்காதது ஏன்..? கடலூர் பிரச்சாரத்தில் நடந்த விவகாரம்.. மெளனம் கலைத்த திருமாவளவன்..!

thiruma premalatha

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. மேலும் சசிகலா – ராமதாஸ் அணியும் களத்தில் உள்ளது.


ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று திமுகவும், ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று அதிமுகவும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அந்த மேடையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான திருமாவளவன், பிரேமலதாவும் இருந்தனர். கடலூர் மாவட்டத்திற்குள் வரும் விருத்தாச்சாலம் தொகுதியில் தான் பிரேமலதா போட்டியிடுகிறார். வேட்பாளர் என்ற முறையிலும் தேமுதிக பொதுச்செயலாளர் என்ற முறையிலும் கலந்து கொண்டார். திருமாவளவன் பேசும் போது கடலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.

ஒவ்வொரு வேட்பாளரின் பெயரை திருமா உச்சரிக்கும் போது, திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உட்பட வேட்பாளர்கள் எழுந்து கூட்டத்தைப் பார்த்து வணங்கினர். ஆனால், பிரேமலதாவை திருமா அறிமுகப்படுத்தி அவரது பெயரை உச்சரித்த போது, நாற்காலியில் அப்படியே அமர்ந்திருந்தார். அதேசமயம், ஸ்டாலின் பேசும் போது, பிரேமலதாவின் பெயரை சொன்னபோது, உடனே எழுந்து நின்று கூட்டத்தைப் பார்த்து கைக்கூப்பி வணங்கினார்.

பிரேமலதாவின் இத்தகையை செயலால் திருமாவளவன் மிகவும் அப்-செட்டாகி விட்டார். இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக வேட்பாளர்களை மட்டுமே நான் அறிமுக செய்தேன். மரியாதை நிமித்தமாக தான் பிரேமலதா பெயரை கூறினேனே தவிர அவரை நான் அறிமுகப்படுத்தவில்லை” என்றார்.

Read more: LIC-யில் முதலீடு செய்வோருக்கு ஜாக்பாட்..! ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்..!

English Summary

Why didn’t Premalatha stand up? The incident that happened during the Cuddalore campaign.. Thirumavalavan broke his silence..!

Next Post

JOB: ரூ. 38,000 சம்பளத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை.. எழுத்து தேர்வு கிடையாது..!

Tue Apr 14 , 2026
JOB: Rs. 38,000 salary job at Chennai University.. No written exam..!
job 2

You May Like