டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்வின் போது வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. சில வரிகள் மட்டுமே பாட வேண்டும் என பாடகர்களுக்கு காங்கிரஸ் தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் இசை குழுவினர் முழு பாடலையும் பாடியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் பாடலை நிறுத்துமாறு கையசைத்துள்ளனர். எனினும் பாடல் முழுமையாக பாடி முடிக்கப்பட்டது
இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் கோபால் கிருஷ்ணா அகர்வால், காங்கிரஸின் இந்த செயல் வெட்க கேடானது என்று தெரிவித்துள்ளார். வந்தே மாதரம் பாடல் வெறும் தேசிய கீதம் மட்டுமல்ல அது ஒரு தேசிய உணர்வு என்று கூறியுள்ள அவர், தேசிய கீதத்தை காங்கிரஸ் அவமானப்படுத்தி விட்டதாகவும், வந்தே மாதரம் பாடப்படுவதற்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்திருப்பது காங்கிரஸின் மன நிலையை பிரதிபலிக்கிறது என்றார்.
Sonia Gandhi appeared visibly irritated as the full version of Vande Mataram was played. 🇮🇳
— Sunanda Acharya (@Sunanda_Iam) August 15, 2026
A song that has inspired India’s freedom struggle for generations should be a moment of pride, not discomfort.
Vande Mataram! 🇮🇳#VandeMataram #SoniaGandhi #India #Patriotism pic.twitter.com/C6psnfLW4F
இந்நிலையில், பாஜகவின் குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நீண்ட நேரம் நிற்க வேண்டி இருப்பதால் அவருக்கு நாற்காலி வழங்க கோரி சோனியா கேட்டதாகவும், வந்தே மாதரம் பாடலை அவர் பாதியில் நிறுத்த சொல்லி அவமதிக்கவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Read More : சட்டசபையில் ஒலித்த குரல்..!! CM விஜய்யின் அதிரடி முடிவு..!! முதல்முறை MLA-க்களுக்கு கார்..!!



