கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களை சேர்ந்த தமிழர்கள்அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக மாநில வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில வனத்துறை அளித்த விளக்கம் ஏற்புடையதல்ல. இதுதொடர்பாக நேர்மையான விசாரணை நடக்க வேண்டும். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு செய்து தர வேண்டும். இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர், 2026 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை…
— TVK Vijay (@TVKVijayHQ) August 16, 2026
Read More : தவெக அரசுக்கு ஓராண்டு மட்டும் தான் அவகாசம்..!! தானாகவே ஆட்சி கவிழும்..!! அண்ணாமலை எச்சரிக்கை..!!


