ஸ்டாலின் மிசாவில் தான் கைதானாரா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியுமா? என்று உதயநிதிக்கு தவெக சவால் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”அரசியலாகவும், கருத்தியல் ஆகவும் மோதும் வக்கும் திராணியும் இல்லையென்றாலும், வாய்ச்சவடால் விடுவதில் மட்டும் ஆபாசநிதிக்கு குறையொன்றுமில்லை. மிசாவில் கைதானவர் அப்பா என்று திமுகவினரும், திமுகவின் அடிவருடிகளும் உருட்டுவதற்கு, இது தாத்தா காலம் என்றெண்ணி வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியிருக்கிறார் உளறல்நிதி. என்ன சொன்னாலும் நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் அறிவில்லாத அறிவாலயத்தார் அல்ல, உருட்டுநிதி!
பொதுவெளியில் பெண்களை ஆபாசமாக பேசும்போது வராத வெட்கம், பெண்களை ஆபாசமாக பேசியதால் கைதானேன் என்று சொல்வதில் வருகிறதாம் வெட்கங்கெட்ட ஆபாசநிதிக்கு. அப்பா மிசாவில் தான் கைதானாரா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியுமா, ஆபாசநிதி?” என்று தவெக கடுமையாக விமர்சித்துள்ளது.
அரசியலாகவும் கருத்தியலாகவும் மோதும் வக்கும் திராணியும் இல்லையென்றாலும், வாய்ச்சவடால் விடுவதில் மட்டும் ஆபாசநிதிக்குக் குறையொன்றுமில்லை.
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) August 16, 2026
மிசாவில் கைதானவர் அப்பா என்று திமுகவினரும், திமுகவின் அடிவருடிகளும் உருட்டுவதற்கு, இது தாத்தா காலம் என்றெண்ணி வாய்க்கு வந்ததை உளறிக்… pic.twitter.com/hu0anlpljw
முன்னதாக, திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”தவெக அரசின் கடந்த 100 நாள் ஆட்சியில் எதிர்க்கட்சியினர், சமூக வலைதளப் பதிவர்கள் மற்றும் ஜென்-இஸட் (Gen Z) இளைஞர்களை குறிவைத்துத் தொடர் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். தவெக அரசு தனது பாதுகாப்பற்ற உணர்வு காரணமாகவே எதற்கெடுத்தாலும் கைது என்ற பாசிசப் போக்கைக் கையாள்வதாகவும், யாரைக் கைது செய்வது என்பதற்கு நேர அட்டவணை தயாரிக்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
இத்தகைய தொடர் அடக்குமுறைகளுக்கு மத்தியில், திமுகவின் சட்டத்துறையும் வழக்கறிஞர் அணியும் இடைவிடாது சட்டப் போராட்டம் நடத்தி கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் துணை நின்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தவெகவின் கைது நடவடிக்கைகளே கழகத்திற்குப் புத்துணர்ச்சியூட்டும் காரணியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய அமைச்சரவையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தங்களின் துறை சார்ந்த அடையாளங்களை இழந்து செயல்படுவதாகவும், யார் எந்தத் துறைக்குப் பொறுப்பு வகிக்கிறார்கள் என்பதே முதலமைச்சருக்கு தெரியாத அளவிற்கு நிர்வாகக் குளறுபடிகள் நிலவுவதாகவும் கூறினார்.
Read More : அரசுப் பள்ளியில் திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாட்டம்..!! ரீல்ஸ் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய தொண்டர்கள்..!!



