தினமும் ஒரு மத்திய அமைச்சர்… ‘Gen Z’ தலைமுறைக்காக புதிய திட்டத்தை தொடங்கிய மத்திய அரசு!. பிரதமரின் மாஸ்டர் பிளான்!

ModigovtGenZ

இந்தியாவின் இளைய தலைமுறையினர்(‘Gen Z’) மற்றும் மாணவர்களுடன் மத்திய அரசாங்கத்தின் தொடர்பை வலுப்படுத்தும் வகையில், ‘ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்’ (One Day, One University) என்ற புதிய மற்றும் விரிவான மக்கள் தொடர்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் கீழ், ஒரு மத்திய அமைச்சர் தினமும் ஒரு பல்கலைக்கழகத்திற்குப் பயணம் செய்து மாணவர்களை நேரடியாகச் சந்திப்பார்கள். நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் தங்கள் கருத்துகளையும் கவலைகளையும் அமைச்சர்களிடம் நேரடியாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயன்படும் பல்வேறு மத்திய அரசின் நல திட்டங்கள் மற்றும் உதவி திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் இக்கூட்டங்களில் விளக்குவார்கள். இந்தச் சுற்றுப்பயணங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, கல்வித்துறை அமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுமார் 1,300 பல்கலைக்கழகங்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் விவாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் NEET தேர்வு முறை தொடர்பான மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்குப் பிறகு, மாணவர்களுடன் வெளிப்படையான உரையாடலை ஏற்படுத்தவும், அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த தேவைகளைப் புரிந்து கொள்ளவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

1newsnationuser5

Next Post

தென் மண்டல மாநாடு!. சென்னையில் கூடும் முதல்வர்கள்!. விஜய்-டி.கே.சிவகுமார் தனிப்பட்ட முறையில் ஆலோசனை?.

Thu Aug 20 , 2026
சென்னை ஈ.சி.ஆர் சாலையில் நடைபெறவிருக்கும் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் தமிழகம் வந்தடைந்தனர். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியின் முதலமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ‘தென் மாநில முதல்வர்கள் மாநாடு’ சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு மத்திய […]
vijay dk shivakumar

You May Like