உலகளாவிய சாதகமான சூழல் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் விலைமதிப்பற்ற உலோகங்களை நோக்கித் திரும்பியதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மீண்டும் உயர்ந்தன. இதன் விளைவாக, உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தையும், வெள்ளியின் விலை 15 வார கால உச்சத்தையும் எட்டின.
அந்தவகையில் வாரத்தின் முதல்நாளான இன்று (ஆகஸ்ட் 24) அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.15,030க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து ரூ.1,20,240க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே, வெள்ளியின் விலையும் தனது அதிரடி ஏற்றப் போக்கைத் தொடர்ந்தது. வெள்ளிக்கிழமையன்று, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 5,000 அதிகரித்து ரூ. 2,50,000-ஐ எட்டியது. அனைத்து வரிகளையும் உள்ளடக்கிய இந்த விலை, கடந்த 15 வாரங்களில் இல்லாத உச்சமாகும்.
அதன்படி வெள்ளி விலை இன்று ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.275க்கும், ஒரு கிலோ ரூ.5000 உயர்ந்து ரூ.2,75,000க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.15,000 மற்றும் ஒரு சவரன் ரூ.1.20 லட்சத்தை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.



