“அவன கொன்னுடு… அப்போ தான் நம்ம ஜாலியா இருக்கலாம்!” கள்ளக்காதலுக்காக இளம் பெண் செய்த அதிர்ச்சி காரியம்!

large murder lee 85240

பீகார் மாநிலத்தில் உள்ள மான்சி ரயில் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த ஜூன் 11-ஆம் தேதி விரைவு ரயிலில் பயணம் செய்த மின்சாரத்துறை ஊழியர் தேவ்குமார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.


தொழில்நுட்ப ஆதாரங்கள், அறிவியல் தடயங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்த தேவ்குமாரின் மனைவி சுமிதா குமாரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் சுமிதா குமாரியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

விசாரணையில், சுமிதா குமாரிக்கும் அஜித் குமார் என்ற வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஆனால் இவர்களின் உறவுக்கு தேவ்குமார் தடையாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலர்கள் இருவரும் தேவ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் குமார் மற்றும் அவரது கூட்டாளி ராஜு ஆகியோருடன் இணைந்து தேவ்குமாரை சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில், சுமிதா குமாரி, அவரது கள்ளக்காதலன் கணவர் தேவ்குமார், அஜித் குமார் மேலும் அவரது நண்பர் ராஜு ஆகியோரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: பாழடைந்த கட்டடம்… 2 சிறுமிகள்… பரபரப்பை கிளப்பிய வைரல் வீடியோ!

Saranya

Next Post

"என்ன… யாராவது காப்பாத்துங்க!" அலறித் துடித்த இளம்பெண்… பொதுமக்கள் முன்னிலையில் வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்!

Sun Jul 19 , 2026
இன்றைய காலகட்டத்தில், பல இளைஞர்களிடம் “எனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்ற மனநிலை அதிகரித்து வருவது கவலைக்கிடமான ஒன்றாக உள்ளது. சிறுவயதிலிருந்தே பகிர்ந்து கொள்வது, விட்டுக் கொடுப்பது, பிறரின் உணர்வுகளை மதிப்பது போன்ற நல்ல பண்புகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். இத்தகைய மதிப்புகள் குறைவதால்தான் காதல், கோபம், பழிவாங்கும் மனப்பான்மை உள்ளிட்ட காரணங்களால் பல கொடூரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன என்று சமூக […]
WhatsApp Image 2026 07 19 at 3.50.15 PM

You May Like