கொடூர சித்ரவதைக்கு ஆளான தமிழர்கள்!. தவெக அரசு என்ன செய்தது?. உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!

udhayanidhi assembly

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.


இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட 3 தமிழர்களின் உடற்கூறாய்வு குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தார். அப்போது, கர்நாடக அரசால் சுட்டுக்கொள்ளப்பட்ட 3 தமிழர்களின் உடற்கூறாய்வு விவரங்கள் வெளியே வந்துள்ளது. அதில் அவர்கள் கொடூரமாக, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மேல்மட்ட நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும், இது தொடர்பாக அந்த மாநில முதலமைச்சரிடமிருந்து ஏதேனும் தகவல் பெறப்பட்டுள்ளதா?. இந்த விவகாரத்தில் தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேள்வி எழுப்பிய உதய நிதி, தென்மண்டல் மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகம் வந்த கர்நாடக முதல்வரிடம் தமிழர்கள் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். மேலும், மூன்று தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அவர்களுடைய குடும்பத்துடன் துணை நிற்க வேண்டும். அந்த குடும்பங்களுக்கு போதுமான நிதி உதவிகள் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.

1newsnationuser5

Next Post

திமுக–பாஜக கூட்டணியா? தவெக–விசிக இணைப்பா? தமிழக அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

Tue Aug 25 , 2026
தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான புதிய கணக்குகள் உருவாகத் தொடங்கியுள்ளன. குறிப்பாக திமுக, பாஜக, அதிமுக, விசிக மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் எதிர்கால நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் மணி, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசியலில் உருவாகக்கூடிய புதிய கூட்டணி வாய்ப்புகள் […]
WhatsApp Image 2026 08 25 at 1.21.41 PM

You May Like